லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் புகைப்படம் பின்னணி இதானா? வித்தியாசமான காம்போவா இருக்கே...

லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் புகைப்படம் ஒன்று நேற்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. என்னவாக இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் இயக்கத்தில் 171வது படத்தின் பணிகளில் பிஸியாகி இருக்கிறார். இதற்கிடையில் லோகேஷ் தன்னுடைய தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரை முதல்வராக்கியதே அந்த இரண்டு பாடல்கள்தான்… பிரபலம் சொன்ன தகவல்!..

நேற்று இணையத்தில் ஒரு புகைப்படம் லீக்கானது. கருப்பு டோனில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருந்தனர். என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் இணையத்தில் அதிகமாகியது. ஒரு கட்டத்தில் ஸ்ருதிஹாசனை வைத்து லோகேஷ் ஷார்ட் பிலிம் எடுக்க இருக்காரோ என்ற கேள்விகளும் அதிகமாகியது.

இந்நிலையில் அதுகுறித்த தகவல்கள் லீக்காக்கி இருக்கின்றன. அந்த புகைப்படம் காதலர் தினத்திற்கு வெளிவர இருக்கும் ஒரு பாடலுக்காக எடுக்கப்பட்டதாம். இந்த பாடலை ஸ்ருதிஹாசன் இயக்க இருக்கிறாராம். லோகேஷ் வித்தியாசமாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த பாடலை ஸ்ருதி எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு நாட்கள் நடந்த இப்பாடலின் ஷூட்டிங் இன்று தான் முடியாது இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே துபாய் நிகழ்ச்சியில் ராஜ்கமல் நிறுவனத்தின் ஒரு பிராஜெக்ட்டில் ஸ்ருதி இருப்பதாக கமல் அறிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: லீக்கான கோட் படத்தின் முக்கிய காட்சி… விஜய் – பிரசாந்த் மோதல்.. என்னங்க இப்படி ஆச்சு?

இதனை தொடர்ந்து, இனிமேல் டெல்லுலு இஸ் த நியூ சொல்லுலு எனத் தொடங்கும் இந்த பாடலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story