படம் எப்படி வேணா இருக்கட்டும்! இத மட்டும் வாங்கிக் கொடுங்க!. – தயாரிப்பாளரிடம் லோகேஷ் கேட்ட பரிசு

Published On: October 22, 2023
| Posted By : Rohini
loki

Lokesh asked Gift: கடந்த 19ஆம் தேதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் வெளியானது லியோ திரைப்படம். பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த லியோ திரைப்படம் இன்றுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூல் மன்னனாக வலம் வரும் விஜய் இந்த லியோ படத்தின் மூலமும் நல்ல வசூலை பெற்று வருகிறார். முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 148 கோடி என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது நாளின் முடிவில் 210கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இது என்ன பாட்டு?!.. அவமானப்படுத்திய நடிகை!… பாட்டு மூலம் திமிரை அடக்கிய கண்ணதாசன்…

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து விடுமுறை தினமாக இருப்பதால் படம் கண்டிப்பாக எதிர்பார்த்த வசூலை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தில் முதல் பாதி நன்றாக இருக்கிறது என்றும் இரண்டாம் பாதியில் லோகேஷ் சொதப்பி விட்டதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

உண்மையிலேயே படம் எங்கேயும் போரடிக்காதவாறே செல்கிறது. ஆனால் பிரபல மாஸ் நடிகர்களை வில்லன்களாக வைத்து அவர்களுக்குண்டான கதாபாத்திரத்தில்தான் லோகேஷ் சறுக்கிவிட்டார். அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் இவர்களுக்குண்டான கேரக்டரை அதிகளவில் எதிர்பார்த்து போகும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைத்தான் தரும்.

இதையும் படிங்க: உதயநிதி மிஸ் பண்ண சூப்பர்ஹிட் படம்… இயக்குனருக்காக மட்டுமே ஓகே சொன்ன கலகத் தலைவன்..!

ஆனால் படமுழுக்க விஜய்தான் தெரிகிறார். அவரின் கதாபாத்திரத்தை எப்பொழுதும் போல் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த நிலையில் வசூலில் நினைத்தாவாறே லியோ படம் கலெக்‌ஷனை அள்ளி வருவதால் அந்த சந்தோஷத்தில் லியோ தயாரிப்பாளர் லலித் பல சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அப்போது லியோ படம் குறித்தும் லோகேஷ் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்தார். அதாவது விக்ரம் பட வெற்றிக்கு பிறகு கமல் லோகேஷூக்கு விலையுயர்ந்த காரை பரிசாக கொடுத்தார். அதே போல் லியோ படத்திற்காக நீங்கள் லோகேஷுக்கு ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுக்கப் போறீங்களா? என்ற  கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: சல்லி சல்லியா ஒடச்சிட்டீங்களேப்பா..! அப்போ இது லோகி கதையில்லையா… ஓபனாக சொன்ன லலித்..!

அதற்கு பதிலளித்த லலித் லியோ படத்தின் போது எனக்கு என்ன சார் வாங்கிக் கொடுப்பீங்கனு லோகேஷ் கேட்டது உண்மைதான் என கூறினார். அதற்கு என்ன வேண்டும் என நான் கேட்ட போது ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுப்பீங்களானு லோகேஷ் கேட்டாராம். அதற்கு என்ன வாங்கிக் கொடுத்தா போச்சு என லலித் சொன்னாராம்.