‘கூலி’க்கு பிறகு என்னென்ன ப்ராஜக்ட்? அசால்டா ரோலக்ஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்..

lokesh
Lokesh: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த லோகேஷ் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்தார். ஒரு இரவை பற்றிய பார்வையை விளக்கும் படமாக அமைந்ததுதான் கைதி படம். நான்கு தொடர்பில்லாத கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் அமைந்தது.
ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான கைதி படத்திற்கு சாம் சிஎஸ்ஸின் இசை மேலும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. டில்லி என்ற கேரக்டரில் கார்த்தி இந்தப் படத்தில் நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை எடுத்தார். அந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
லோகேஷை பொறுத்தவரைக்கும் அவர் எடுக்கும் படங்களில் பெரும்பாலும் போதை பொருள் சம்பந்தமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். அதே போல்தான் விக்ரம் படத்திலும் வைத்திருந்தார். இதுவே லோகேஷின் மீது பத்திரிக்கையாளர்கள் கடும் விமர்சனத்தை வைத்தனர். இப்படி பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்ததன் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் லோகேஷ்.
இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. இன்று சூர்யா நடிக்கும் ரெட்ரோ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இதை பற்றி லோகேஷிடம் கேட்ட போது இன்னும் படம் பார்க்கவில்லை. இன்று இரவு பார்த்துவிடுவேன். ஆனால் படத்தை பற்றி அவ்வப்போது கார்த்திக் சுப்பராஜிடம் விசாரிப்பேன் என்று கூறினார்.

மேலும் சூர்யாவை வைத்து ஏதும் ப்ளான் இருக்கிறதா? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்க, அதற்கு லோகேஷ் கண்டிப்பாக இருக்கிறது. ரோலக்ஸ் இருக்கே? அடுத்து சூர்யா வேறொரு ப்ராஜக்ட்டில் இறங்க போகிறார். எனக்கு அடுத்து ஒரு ப்ராஜக்ட் இருக்கிறது. அதாவது கைதி 2 இருக்கிறது. இதெல்லாம் முடிந்து அடுத்து ரோலக்ஸ் தான் என அசால்ட்டா அப்டேட் கொடுத்துவிட்டு சென்றார் லோகேஷ்.