Connect with us

Cinema News

ரஜினியும் இல்ல கமலும் இல்ல… லோகேஷ் அடுத்து இயக்க போறது இந்த நடிகரை தானாம்! ஓ அதான் தைரியமோ!

தமிழ் சினிமாவில் ஐடியல் இயக்குனராகி மாறி இருக்கும் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய அடுத்த படத்தில் யாரை இயக்க இருக்கிறார் என்பதே பலரின் தீவிர எதிர்பார்ப்பாக மாறி இருக்கும் நிலையில், அது ரஜினி தான் இல்லை சூர்யா. அட இல்லப்பா கமல் தான் மீண்டும் என பல யூகங்கள் கிளம்பியது.

இந்த எல்லா கேள்விக்கும் ட்விஸ்டாக லோகேஷின் அடுத்த படத்தில் நாயகனாக மாறி இருப்பவர் ராகவா லாரன்ஸ். இது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வரும் 15ந் தேதி சந்திரமுகி 2 ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் வேட்டையனாக லாரன்ஸ் நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

இதையும் படிங்க : 5 வருஷமா குப்பை கொட்டியும் கண்டுக்காத இளையராஜா – கைகொடுத்து தூக்கிய இசைப்புயல்

சமீபத்தில் தன்னுடைய தொண்டு நிறுவனத்துக்கு யாரும் எந்தவித நன்கொடையும் கொடுக்க வேண்டும். இதுவரை வருடத்துக்கு ஒரு படம் நடித்து வந்த நான். இனி வருடத்துக்கு மூன்று படம் நடிக்க இருக்கிறேன். அந்த சம்பளத்தில் இனி என் பிள்ளைகளை பார்த்து கொள்வேன் என நேரடியாக வீடியோ வெளியிட்டார். 

அந்த நம்பிக்கைக்கு காரணம் தற்போது தான் வெளிச்சமாகி இருக்கிறது. விக்ரம் 3 இயக்குவாரா? ரோலக்ஸை இயக்குவாரா இல்ல ரஜினிகாந்தை இயக்க போகிறாரா என பல யூகங்கள் கிளம்பியது. ஆனால் தற்போது லோகேஷ் நிறுவனத்தில் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகனாகி இருக்கிறார் லாரன்ஸ்.

இதையும் படிங்க : பாரதிராஜாவுக்கே ஐடியா கொடுத்த நடிகர்… முதல் படமே தோல்வி… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

இப்படத்தினை குலுகுலு பட இயக்குனர் ரத்னகுமார் இயக்குகிறார். இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.  இப்படத்திற்கு லோகேஷ் கதை, திரைக்கதையும் எழுதி தர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top