இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?- சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷுக்கு என்ன வேடம் தெரியுமா?...

Lokesh Kanagaraj
லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்ககூடிய டாப் இயக்குனராக திகழ்ந்து வருகிறார். கடந்த வருடம் அவர் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது.

Lokesh Kanagaraj
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடம் லோகேஷ் கனகராஜை கொண்டு சென்றது. மேலும் அத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் (LCU) என்ற புதிய பாணியை கையாண்டிருந்தார். ஹாலிவுட்டில் மார்வெல். டிசி போன்ற நிறுவனங்கள் கையாண்டு வரும் இந்த விஷயத்தை லோகேஷ் கனகராஜ் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

Leo
தற்போது அவர் இயக்கி வரும் “லியோ” திரைப்படம் கூட LCU-க்குள் வருமா? வராதா? போன்ற கேள்விகளும் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், ஆர்.ஜே.பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கும் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj
இந்த நிலையில் தற்போது “சிங்கப்பூர் சலூன்” என்ற திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது அத்திரைப்படத்தில் ஒரு ரியாலிட்டி ஷோ நடப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம். அந்த ரியாலிட்டி ஷோவில் நடுவராக வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். ஒரு நிமிடம் கூட அந்த கதாப்பாத்திரத்தின் நீளம் இருக்காதாம். இவ்வாறு ஒரு தகவலை அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உன் காசு வேணாம் போடா!.. தயாரிப்பாளரிடம் கடுப்பான வாலி.. எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?..