லோகேஷ் கனகராஜும் அனிருத்தும் சேர்ந்து நடிக்க போறாங்களா!. என்னப்பா சொல்றீங்க!…
தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படத்திலேயே கவனம் ஈர்த்தவர். அதன்பின் கைதி திரைப்படத்தில் மீண்டும் தான் யார் என நிரூபித்தார். அதைத்தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அப்படி உருவான திரைப்படம்தான் மாஸ்டர். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அப்படத்திற்கு பின் கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் அவரை பெரிய இயக்குனராக மாற்றிவிட்டது. ஏனெனில் அப்படத்தின் வசூல் அப்படி.
தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் லோகேஷின் ஸ்டைலில் கேங்ஸ்டர் படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த ஆச்சர்யமே தாங்கவில்லை எனில், அவருடன் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து நடிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. பல தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு சண்டை காட்சி அமைத்தவர்கள் அன்பு - அறிவு. இவர்கள் இரட்டையர்கள். கேஜிஎப், விக்ரம் ஆகிய படங்களுக்கும் இவர்கள்தான் சண்டைக்காட்சி அமைத்தனர்.
இவர்கள் இருவரும் தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளனர். அவர் இயக்கும் படத்தில்தான் லோகேஷ் கனகராஜும், அனிருத்தும் இணைந்து நடிக்கவுள்ளனராம். தொடர்ந்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் எப்படி நேரம் ஒதுக்கி நடிப்பார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவரையும், அனிருத்தையும் இணைந்து திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாகத்தான் இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். தற்போது லியோ படத்திற்கும் அனிருத்துதான் இசை. எனவே, இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.