கமல்ஹாசன் மகளை கசக்கி பிழியும் லோகேஷ் கனகராஜ்!.. ’இனிமேல்’ இப்படித்தானா பாஸ்?..

by Saranya M |
கமல்ஹாசன் மகளை கசக்கி பிழியும் லோகேஷ் கனகராஜ்!.. ’இனிமேல்’ இப்படித்தானா பாஸ்?..
X

லோகேஷ் கனகராஜை வைத்து ஸ்ருதிஹாசன் பாடல் ஒன்றை காதலர் தினத்துக்கு இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியானது. ஆனால், காதலர் தினம் தாண்டியும் இன்னமும் காணோமே இங்கேயும் ஹார்ட் டிஸ்க் ஏதாவது காணோமான்னு நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கண் கொள்ள காட்சியாக ‘இனிமேல்’ பாடலின் டீசர் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கமல்ஹாசன் ஃபேனா அவர் வீட்டுக்குள்ள போயி அவருடைய மகள் ஸ்ருதிஹாசனையே கசக்கி பிழியுறியே லோகிண்ணா நீ பலே ஆளு தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அப்படிப் போடு பாட்டு பண்ண வராது, ரொமான்ஸ் போர்ஷன் வராது, நடிகைகளை பார்த்தால் தலையை துண்டா வெட்டிவிடுவாரு, சைக்கோ மனநிலை கொண்டவர் என்றெல்லாம் லோகியை திட்டி வந்தனர்.

இதையும் படிங்க: என் வாழ்க்கையே கெடுத்துட்டீயே… ரஜினி படத்தில் இயக்குனரை திட்டிய தயாரிப்பாளர்!… ஆனா நடந்தது?

ஆனால், ஸ்ருதிஹாசன் கழுத்தில் ரொமான்டிக்காக கை வைத்தும், சோபாவில் அவர் மீது உருண்டு புரண்டும் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

இனிமேல் வீடியோ ஆல்பம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் தற்போது டீசரை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. நேற்று லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் மணக்கோலத்தில் கேம் ஆடுவது போல போட்டோ வெளியானதும் ஏதோ சூப் சாங்காக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சொர்க்கவாசல் பாடலாக மாறிவிட்டது இந்த இனிமேல்.

இதையும் படிங்க: பயோபிக் படத்துக்கு இளையராஜாவின் சம்பளம் இதுதான்!. இந்த விஷயத்துல அவர் செம கறாரு!…

தலைவர் 171 படத்தை எடுப்பதில் லோகேஷ் கனகராஜ் இனிமேல் கவனம் செலுத்தாமல் ஸ்ருதிஹாசனுடன் அடுத்தடுத்து டூயட் பாட கிளம்பி விடப் போகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Next Story