ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் மட்டுமில்லை!.. அட அதையும் பண்றாரே லோகேஷ்!.. வெளியானது ’இனிமேல்’!..

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இனிமேல் வீடியோ பாடலில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னதாக அதன் டீசர் வெளியாகி ஷாக்கை கிளப்பியது. இந்நிலையில், தற்போது முழு பாடல் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த பாடலை கமல்ஹாசனே எழுதியுள்ளார். கடைசி வரிகளை கமலே பாடி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு கும்முன்னு இருக்கு!.. மாடர்ன் உடையில் கட்டழகை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..

இனிமேல் பாடல் டீசரில் காட்டியது போல கில்மா பாடலாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒட்டுமொத்த திருமண வாழ்க்கை, பிரிவு, வலி உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக்காட்டி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசனுடன் சோபாவில் படுத்து உருளும் காட்சிகள் மட்டும் டீசரில் காட்டப்பட்ட நிலையில், திருமணத்துக்கு பிறகு ஸ்ருதிஹாசனுடன் அவர் சண்டை போடும் காட்சிகளில் நடிகராக மாஸ்க் காட்டுகிறார். போகி பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் “ பழையன கழிதலும் புதியன புகுதலும்” வரிகளை கமல்ஹாசன் கச்சிதமாக இந்த பாடலில் பொருத்தி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள இனிமேல் பாடல் இமிடியேட் பாடல் ஹிட் என்றே சொல்லலாம். தியேட்டரில், டேட்டிங் செல்வதில் ஆரம்பித்து ஹேப்பியாக காதலிப்பது, திருமணம் செய்துக் கொள்வது அதன் பின்னர் கணவன், மனைவியான பின்னர் சின்ன சின்ன விஷயங்களில் சண்டை வருவதை காண்பித்து விட்டு இப்படியெல்லாம் இருக்க வேண்டுமா? என புரிந்துக் கொண்டு ஹேப்பியாக இருப்பது போல இந்தப் பாடலை நிறைவு செய்துள்ளனர்.

Related Articles
Next Story
Share it