லியோ கலெக்‌ஷன் பற்றிய கேள்விக்கு நைஸா கழண்ட லோகேஷ் கனகராஜ்!.. செகண்ட் ஹாஃப் மொக்கைன்னு ஒத்துக்கிட்டாரு!..

Published on: October 28, 2023
---Advertisement---

ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நிலையில், அவர் உள்ளே நுழையும் போதே ரோலக்ஸ் என ரசிகர்கள் கத்த ஆரம்பித்து விட்டனர்.

அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் லியோ படம் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துள்ளது. சிலர் 2ம் பாதி நெகட்டிவ் விமர்சனங்களை கூறியுள்ளனர். அதையும் கருத்தில் எடுத்துக் கொண்டேன் என வெளிப்படையாக லியோ படத்திற்கு 2ம் பாதியில் வெளியான நெகட்டிவ் விமர்சனம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: லியோவில் விஜய்க்கு பதில் அஜித்!.. அடக்கொடுமையே என்னடா இது விடாமுயற்சிக்கு வந்த வில்லங்கம்?..

மேலும், லியோ படத்தின் வசூல் குறித்து வெளியான அறிவிப்பு எல்லாம் பொய் என சர்ச்சை வெடித்துள்ளதே அது பற்றி உங்கள் பதில் என்ன? என லோகேஷ் கனகராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, இப்போ தான் ஊரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளேன். கலெக்‌ஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். கலெக்‌ஷன் பற்றி எனக்குத் தெரியாது. படத்தை எந்தளவுக்கு ரசிகர்களுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு எடுத்துக் கொடுப்பது தான் என் வேலை அதை செய்து விட்டேன். குறைகள் இருந்தால் அடுத்த படத்தில் சரி செய்து விடுவேன் எனக் கூறியுள்ளார்.

கைதி படம் தான் எனக்கு இயக்குநர் என்கிற அங்கீகாரத்தை கொடுத்தது. பெரிய பெரிய நடிகர்கள் படங்களை எடுக்க கைதி படம் எனக்கு பெரிதும் உதவியது. கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன். தலைவர் 171 அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆரம்பிப்போம். அதன் பின்னர் கைதி 2 படம் பண்ண உள்ளேன் என்றார்.

இதையும் படிங்க: சாமில திருநெல்வேலி!.. சியான் 62ல திருத்தணி.. அறிமுகமே வெறித்தனமா இருக்கே.. இயக்குனர் யாரு தெரியுமா?..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.