ஹீரோவாக லோகேஷ் கனகராஜ்… இயக்க போகும் அந்த டைரக்டர் யார் தெரியுமா? புது ட்விஸ்ட்டா இருக்கே!

by Akhilan |   ( Updated:2025-05-07 07:15:14  )
ஹீரோவாக லோகேஷ் கனகராஜ்… இயக்க போகும் அந்த டைரக்டர் யார் தெரியுமா? புது ட்விஸ்ட்டா இருக்கே!
X

#image_title

Lokesh Kanagaraj: பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் உலகத்தில் இயக்குநராக பரபரப்பாக பெயர் பெற்ற இவர், இப்போது நடிகராக மாறுகிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தனது சினிமா பயணத்தை மாஸ்டர், கைதி, விக்ரம், மற்றும் லியோ போன்ற ஹிட் படங்களின் மூலம் தொடங்கினார். இவர் உருவாக்கிய லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் ரசிகர்களிடையே தனி இடம் பெற்று வரவேற்பு பெற்றது. இவருடைய படங்கள் வேகமான கதைகள் மற்றும் மாஸ் காட்சிகள் தான் அவருக்கு ஒரு பிரத்தியேகமான அடையாளம்.

இவரது சமீபத்தில் தற்போது இயக்கி வரும் திரைப்படம் கூலி. 2025 ஆகஸ்ட் 14 அன்று வெளிவர இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார்.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்தின் ஸ்டைலிஷ் தோற்றம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் முக்கிய அம்சமாக தங்கக் கடத்தல் கதையாக உள்ளதாகவும் எல்சியூ இல்லாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பிசியாக இருந்த லோகேஷ் தற்போது ஹீரோவாக மாற இருக்கிறார்.

#image_title

அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கும் இந்த படம் ஒரு திரில்லர் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் ஏற்கனவே சில சின்ன படங்களில் கேமியோ ரோல்களில் நடித்துள்ளார். முதல்முறையாக ஹீரோவாக அறிமுகமாக இருப்பதால் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளையராஜாவின் பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்க இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது கால தாமதம் ஏற்படும் என்பதால் அந்த இடைவேளையில் தற்போது இப்படத்துக்கு அவர் வந்து இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story