லியோ கொடுத்த அடி!.. மொத்த கதையையும் மாற்றிய லோகேஷ்!. தலைவர் 171 பரபர அப்டேட்!..
Thalaivar 171: மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்தாலும் கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் மூலம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர்தான் லோகேஷ் கனகராஜ். கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவரையே எங்கேயோ கொண்டு சென்றது. அந்த படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
விக்ரம் படத்தின் வெற்றியால் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களே உருவானார்கள். அதோடு. எல்.சி.யூ என புதுசாக ஒன்றை சொல்லி பீதி ஏத்தினார்கள். அதில் மயங்கிய லோகேஷ் விஜயுடன் இணைந்து லியோ படத்தை எடுத்தார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திற்கும் இவ்வளவு எதிரபார்ப்பு உருவானது இல்லை.
இதையும் படிங்க: இது வெடிகுண்டு இல்லை!.. வெறும் குண்டு!.. ஆர்ஜே பாலாஜி பண்ண அலப்பறையை அம்பலப்படுத்திய ப்ளூ சட்டை!..
இந்த படம் பற்றியோ ரசிகர்களும், ஊடகங்களும் அதிகம் பேசியது. ஆனால், படம் வந்த பின் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை சரியாக இல்லை என பலரும் சொன்னார்கள். இதை லோகேஷ் கனகராஜும் ஏற்றுக்கொண்டார்.
ஒருபக்கம், லியோ படம் உருவானபோதே ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் இயக்குவது உறுதியானது. ஆனால், லியோ படத்தின் ரிசல்ட் ரஜினியையே கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது. எனவே, கதையை மிகவும் கவனமாக எழுதி வருகிறார் லோகேஷ் கனகராஜ். முதலில் ரஜினிக்கு அவர் சொன்ன கதையை முழுமையாக மாற்றிவிட்டாராம். மேலும், இதுவரை தான் எழுதிய கதைகள் போல் இல்லாமல் புதுசாக கதையை எழுதி இருக்கிறாராம் லோகேஷ்.
இதையும் படிங்க: நண்பனை கழட்டிவிட்டு அந்த நடிகைக்கு கை கொடுத்த உதயநிதி!.. இந்த முறை பட்ட நாமம் போடாமல் இருந்தால் சரி!
இந்த படத்தில் அவரின் படங்களில் வழக்கமாக இடம் பெறும் போதைப்பொருள் இருக்காது என சொல்லப்படுகிறது. அதோடு, இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கவில்லையாம். ரஜினிகாந்த் கேரியரிலும் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்குமாம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது.
ரஜினி இப்போது வேட்டையன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் லோகேஷின் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறாராம். இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். லியோ படத்தில் நடந்தது போல இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் லோகேஷ் கண்ணும் கருத்துமாக கதையை எழுதி வருகிறாராம்.
இதையும் படிங்க: கட்சியில் ஆள் சேர்க்க விஜய் போடும் மெகா பிளான்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..