இப்படி பண்றீங்களேம்மா!.. லோகேஷோட தேள் கொடுக்கு தயாரிப்புல அடுத்த ஹாலிவுட் ஃபர்னிச்சர் உடையப் போகுதா?..

ஹாலிவுட் படங்களை நிறைய பார்த்து வளர்ந்த இளம் இயக்குனர்கள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களை தமிழில் உருவாக்க முயற்சித்து வருகின்றனர். அதில், சில படங்கள் மட்டுமே ஹிட் அடித்து வரும் நிலையில், பல படங்கள் சொதப்பி வருகின்றன.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் பாதிப்பில் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிய நிலையில், அடுத்ததாக அவரது தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் தயாரிப்பில் உருவாக உள்ள முதல் படத்திற்கு ஃபைட் கிளப் என பிரபல ஹாலிவுட் படத்தின் டைட்டிலேயே வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தை செய்யப் போறேன்!.. யாராவது வந்து கையை புடிச்சிக்கிறீங்களா.. மாளவிகா மோகனனா இப்படி சொல்றாரு?

பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் பிராட் பிட் நடித்து 1999ம் ஆண்டு வெளியான தரமான ஹாலிவுட் சம்பவம் தான் ஃபைட் கிளப். இந்நிலையில், அந்த படத்தின் போஸ்டரில் சிக்ஸ் பேக் உடன் இளைஞனாக பிராட் பிட் சட்டையில்லாமல் இருப்பதை போலவே உறியடி பட இயக்குநரும் ஹீரோவுமான விஜய்குமார் இந்த ஃபைட் கிளப் படத்திலும் நடிக்க உள்ளது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெரிகிறது.

விஜய் குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஆனால், உறியடி 2 படம் ஓடவில்லை. இந்நிலையில், இயக்கத்தில் இருந்து மாறி முழு நேர ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லோகேஷ் உதவி இயக்குனர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் விஜய் குமார் தனது கேங் உடன் நடிக்கப் போகும் படம் தான் ஃபைட் கிளப்.

இதையும் படிங்க: பல மணி நேரம் காத்திருப்புக்கு பின்னாடி கனகாவை சந்தித்த குட்டிபத்மினி! நடிகை சொன்ன பகீர் தகவல்

இந்த படம் பில்டப்புடன் அறிவித்ததை போல ரிலீஸ் ஆகுமா? அல்லது லியோ வந்தவுடன் ஃபிளாஷ்பேக்கே ஃபேக் என சொன்னது போல பல்பு வாங்குமா என்பதை காத்திருந்து காண்போம்.

 

Related Articles

Next Story