என்னுடைய ஹீரோ ஸ்ரீ நிலைமை இதுதான்… லோகேஷ் கனகராஜின் திடீர் ஸ்டேட்மெண்ட்…

Shri Ram: சமீபகாலமாக நடிகர் ஸ்ரீயின் திடீர் நிலைமை குறித்து தகவல்கள் கசிந்த நிலையில் அவரின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கும் ஸ்டேட்மெண்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மாநாடு படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீ. இவர் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். கடந்தாண்டு கூட அவர் படம் இறுகப்பற்று வெளியாகி ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஸ்ரீயின் இன்ஸ்டா கணக்கில் இருந்து பதிவுகள் ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்தது. ஆபாஷமான கேப்ஷன்கள், அரைகுறை உடைகள், கலர் முடி, இளைத்த உடல் என இவர் நிலைமை இப்படியாச்சு என அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
முதலில் இவர் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பலர் கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் பின்னர் கசிந்த தகவலின் படி தன்னுடைய கேரியரில் நடந்த நிறைய ஏமாற்றம் தான் ஸ்ரீயினை இப்படி மாற்றி இருக்கிறது என்றும் அவருக்கு மனநோய் இருப்பதாகவும் தோழி விஷயத்தை உடைத்தார்.
அவர் டெல்லி பக்கத்தில் இருக்கிறார் என அறிந்து கொண்டாலும் சரியான இடத்தினை வெளியில் கசியவிடாமல் பார்த்து கொண்டனர். தன்னுடைய நட்பு, குடும்பத்திடம் இருந்து தள்ளி இருந்தார். தற்போது அவரை மீட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீர் பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், நடிகர் ஸ்ரீராமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து அறிக்கை. நடிகர் ஸ்ரீராம் நிபுணர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார்.
அவர் தனது மீட்பு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துவதால், அவரது பிரைவசியை மதிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025
மேலும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிவிப்புகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களையும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கேட்டுக்கொள்கிறோம்.
நேர்காணல்களில் குறிப்பிட்ட நபர்கள் வெளிப்படுத்தும் எந்தக் கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை மற்றும் அதை முற்றிலும் மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ந்த அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி எனக் குறிப்பிட்டு உள்ளார்.