ரஜினி படத்துக்காக லோகேஷை கைக்குள் போட்டுக்கொண்ட விஜய் பட தயாரிப்பாளர்!… குறுக்க இந்த சன் பிக்சர்ஸ் வந்தா?
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. ஆதலால் விஜய் ரசிகர்கள் “லியோ” திரைப்படத்தின் வெளியீட்டை நோக்கி வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
ரஜினி-லோகேஷ் கனகராஜ்
இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளாராம். இந்த செய்தி ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு வைரல் ஆகி வந்தது. எனினும் தற்போது இது குறித்து ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இயக்கும் திரைப்படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளாராம். லலித் குமார் தற்போது “லியோ” திரைப்படத்தை தயாரித்து வருகிறார். லலித் குமார் இதற்கு முன் “மாஸ்டர்”, “துக்ளக் தர்பார்”, “காத்துவாக்குல ரெண்டு காதல்”, “கோப்ரா” போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.
களமிறங்கிய சன் பிக்சர்ஸ்
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருப்பதால் சன் பிக்சர்ஸ் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாம்.
ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து “லால் சலாம்” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார். அதன் பின் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்துதான் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சக காமெடி நடிகரை எத்தி உதைத்த வடிவேலு… என்ன இருந்தாலும் இப்படியாக பண்றது?