ஆசையாக இருந்த எஸ்.கே.!.. கண்டுக்காம விட்ட லோகேஷ் கனகராஜ்!. தலைவர் படத்துல வாய்ப்பு போச்சே!..

by சிவா |
sivakarthikeyan
X

sivakarthikeyan

90களுக்கு பின் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்த பல நடிகர்களுக்கும் ரஜினியின் பாதிப்பு இருக்கும். காதல், ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், மாஸ் என ரஜினியின் ஸ்டைலை பின்பற்றித்தான் பல நடிகர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து முன்னணி நடிகர்களாக மாறினார்கள்.

ரஜினியின் பாதிப்பு இல்லாமல் எந்த நடிகரையும் பார்க்க முடியாது. விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா போன்ற சில நடிகர்கள் மட்டுமே தனித்துவமாக நடித்தார்கள். அதேபோல், ரஜினியை போல குழந்தைகளுக்கும் பிடிக்கும் ஹீரோவாக மாற வேண்டும்.. அவரை போலவே நமது படங்களும் வசூலை குவிக்க வேண்டும்... அவரைபோலவே சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி 171 படத்தில் இவர்தான் வில்லன்!.. இது கன்ஃபார்ம் நியூஸ்!.. எதிர்பார்க்கவே இல்லையே!…

ரஜினியை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். அதில் விஜயும் ஒருவர். அண்ணாமலை படத்தில் ரஜினி பேசிய ‘அசோக் உன் டைரியில குறிச்சி வச்சிக்கோ’ என வசனத்தை பேசிக்காட்டித்தான் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வாய்ப்பையே வாங்கினார் விஜய். இதே வரிசையில் வருபவர்தான் சிவகார்த்திகேயன்.

ரஜினியின் வசனங்களை மிமிக்ரி செய்து தனது கேரியரை துவங்கியவர் இவர். சினிமாவில் நடிக்க துவங்கியபோதும் இவரிடம் ரஜினியின் ஸ்டைலை நிறைய பார்க்க முடியும். காதல், ஆக்‌ஷன், குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக மாறியது என விஜயை போல இவரும் ரஜினியின் ஸ்டைலைத்தான் பின்பற்றி முன்னேறினார்.

இதையும் படிங்க: இதுக்காடா நீ சினிமாவுக்கு வந்த?!. கமலிடம் கோபப்பட்ட ஜெமினி கணேசன்.. நடந்தது இதுதான்..

இவருக்கு எப்படியாவது ரஜினியுடன் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவரின் நண்பர் நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் படம் எடுத்தபோது ரஜினியின் மகன் வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நினைத்தார். ஆனால், ரஜினி அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் அது நடக்காமல் போனது.

இப்போது லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் பெயர் அடிபட்டது. சிவகார்த்திகேயனும் லோகேஷ் நம்மை அழைப்பார் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அப்படி ஒன்று நடக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு ராகவா லாரன்ஸுக்கு போயிருக்கிறது. இதற்கு எஸ்.கே. செட் ஆக மாட்டார் என நினைத்ததால்தான் லோகேஷ் அவரை அழைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால்தான் அடுத்தடுத்த படங்களை புக் பண்ணி கொண்டு பிஸியாகிவிட்டார்.

Next Story