என் முதல் பட சம்பளம் இவ்வளவு தான்... அதில் என் கைக்கு இவ்வளவு தான் வந்தது.... லோகேஷ் கனகராஜ் சொன்ன சூப்பர் தகவல்

by Akhilan |
என் முதல் பட சம்பளம் இவ்வளவு தான்... அதில் என் கைக்கு இவ்வளவு தான் வந்தது.... லோகேஷ் கனகராஜ் சொன்ன சூப்பர் தகவல்
X

Lokesh

தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2016ம் ஆண்டில், கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த அவியல் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் குறும்படம் கலாம் சேர்க்கப்பட்டது. அவரின் முதல் திரைப்படமாக மாநகரம் படம் அமைந்தது. ஹரிஷ் கல்யாண் மற்றும் ஸ்ரீ ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்திருந்தனர்.

Lokesh

முதல் படமே நல்ல வரவேற்பை கொடுக்க அவரின் அடுத்த படத்துக்கு வரவேற்பு அதிகரித்தது. கார்த்தி நடிப்பில் லோகேஷின் இரண்டாவது படமாக கைதி வெளியாகியது. ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்ததை அடுத்து லோகேஷுக்கு கோலிவுட்டில் இயக்குனருக்கான இடம் கிடைத்தது.

தன்னுடைய மூன்றாவது படமே இளைய தளபதி விஜயை வைத்து இயக்கினார். பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக 13 ஜனவரி 2021 அன்று மாஸ்டர் படம் வெளியிடப்பட்டது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 2021ம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்த் திரைப்படம் மாஸ்டர் தான்.

இந்த வருடத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இதில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் லோகேஷ் தனது முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் 5 லட்ச ரூபாய் தானாம். அதிலும் டிடிஎஸ் போக 4.5 லட்ச ரூபாய் கையில் கிடைத்ததாக தெரிவித்து இருக்கிறார்.

Next Story