லியோ கிளைமேக்ஸில் தெறிக்கவிட்ட அர்ஜூன்!.. பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் செஞ்சதுதான் ஹைலைட்!...

Leo arjun: விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் லியோ. வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கான முன்பதிவு துவங்கிவிட்டது. வெளிநாட்டில் பல ஆயிரம் பேர் முதல் நாள் காட்சியை பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜயுடன் லோகேஷ் கூட்டணி அமைத்திருப்பதாலும், ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக லியோ உருவாகியிருப்பதாலும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துவிட்டது. இந்த படத்தில் பிரதான ஒன்றாக எல்லோராலும் சொல்லப்படுவது சண்டை காட்சிகளைத்தான். இப்படத்தில் அன்பு - அறிவு என்கிற இரட்டையர்கள் சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். இவர்கள் கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய படங்களுக்கு சண்டை காட்சி அமைத்தவர்கள்.

இதையும் படிங்க: லியோவில் த்ரிஷாவை வைத்து இப்படியொரு எல்சியூ கனெக்ட்டா?.. வெளியான செம மேட்டர்.. ஒருவேள இருக்குமோ?..

ஏற்கனவே இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் இருப்பதால் சொல்லவே தேவையில்லை. அவர் வரும் காட்சிகளெல்லாம் தாறுமாறாக இருக்குமாம். அர்ஜூன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் படம் என்றாலே சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்றே ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்கள்.

அவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. அர்ஜூன் முறைப்படி கராத்தே பயின்றவர். துவக்கம் முதலே ஆக்‌ஷன் கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பல வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அர்ஜூன் சமீபகாலமாக வில்லனாகவும், சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: டிக்கெட்டை டெக்னிக்கலா பிடிச்சிருவோம்ல..! லியோ பட புக்கிங்கிற்கு சூப்பர் ஐடியா பிடித்த விஜய் ரசிகர்கள்..!

விஷால் நடித்து இரும்புத்திரை படத்தில் அசத்தலான வில்லனாக வந்து அதிர வைத்தார். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்தார். லியோ படத்தில் அர்ஜூன் விஜயின் அண்ணன் ஹரால்டு தாஸ் வேடத்தில் நடித்திருப்பதாகவும், விஜயை தேடி கொல்ல அலையும் வேடத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, லியோ படத்தின் இறுதிக்காட்சியில் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளாராம் அர்ஜூன். இதைப்பார்த்து அசந்துபோன லோகேஷ் கனகராஜ் அவருக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம்.

இதையும் படிங்க: லியோவில் முக்கியமானதே இதுதான்!.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. அண்ணாச்சியாக மாறிய லோகி!..

 

Related Articles

Next Story