கடுங்குளிரில் விஜய் செய்த வேலை!.. மிரண்டு போன லியோ படக்குழு!…

Published on: March 6, 2023
leo
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவில் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என அவரின் ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர். இவரின் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

leo vijay

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.

மேலும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் மிஷ்கின், அர்ஜூன் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு கடுமையான குளிர் நிலவுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தினமும் காலை 9 மணிக்கு துவங்குகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்று வெளியே தெரியவந்துள்ளது. ஒருநாள் காலை எல்லோரும் கூடி படப்பிடிப்பு துவங்கும் முன் விஜய் எங்கே என தேடியுள்ளனர். அப்போது விஜயின் உதவியாளர் அங்கு வந்து ‘அவர் காலை 8 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டார்’ என சொன்னதும் லோகேஷ் கனகராஜுக்கு தூக்கி வாரிப்போட்டதாம்.

படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவர் பார்த்தால் ஜெர்க்கின் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார் விஜய். அவரிடம் ‘இவ்வளவு சீக்கிரம் நீங்கள் வரவேண்டும் என அவசியம் இல்லை’ எனக்கூற விஜயோ ‘எனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க எப்ப வேணா ஸ்டார்ட் பண்ணுங்க. நான் சீக்கிரம் வந்துடுவேன்’ எனக்கூற லோகேஷ் கனகராஜ் நெகிழ்ந்துபோனாராம்.

இதையும் படிங்க: வயசு பசங்க பாவம்!.. வாளிப்பான உடம்ப வளச்சி வளச்சி காட்டும் விஜே கீர்த்தி….

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.