ராஜமௌலி செய்த காரியம்.! தப்பித்துக்கொண்ட லோகேஷ் கனகராஜ்.!
ராஜமௌலி இயக்கும் RRR திரைப்படத்தில் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க கதாநாயகிகளாக ஆலியா பட் மற்றும் ஒலிவியா மோரிஸ் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த 1920களின் பின்னணியில் உள்ள வரலாற்றில் இரண்டு போர்வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக் இப்படத்தில் வைத்துள்ளாராம் ராஜமௌலி.
டி.வி.வி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ள இப்படம் கிட்டத்தட்ட 14 மொழிகளில் வெளியாகும் இப்படம் அனைத்து ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் முடித்ததும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுக்கு கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். ஆனால், அடுத்தடுத்து கமல்ஹாசனின் விக்ரம், கைதி 2, விஜய் புது படம் என பிஸியாகியுள்ளார்.
இந்நிலையில், மகேஷ் பாபு, அடுத்ததாக ராஜமௌலி படத்தில் பிஸியாகிவிட்டதால், அடுத்த 2 வருடம் அவரால் வெளியே வர முடியாது. ஆதலால், லோகேஷ் தற்போதைக்கு தன்னுடைய படங்களை முடித்துவிட்டு மகேஷ் படத்திற்கு போகலாம் என சினிமா வட்டாரத்தில் பேசபடுகிறது.