நண்பனுக்கு ஒன்னுனா சும்மா இருப்பேனா?..மாவீரனை காப்பாற்றிய லோகேஷ்!..
மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘மாவீரன்’ திரைப்படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீரென சறுக்கல் ஏற்பட்டது.
இதனிடையே சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் பெரிய தோல்வியை தழுவியது. இதன் தாக்கம் சிவகார்த்திகேயனிடம் அதிகமாக இருந்ததன் காரணமாக மாவீரன் படத்தின் ஸ்கிரிப்டில் தலையிட்டதாக தெரிகிறது. ஆனால் இது மடோனா அஸ்வினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
இதையும் படிங்க : ஸ்ரீப்ரியாவை காதலித்த இரண்டு பொண்டாட்டி நடிகர்… திருமணம் செய்யாமல் கழட்டி விட்ட சோகம்..
மேலும் முதலிலேயே சிவகார்த்திகேயனிடம் அஸ்வின் பவுண்டடு ஸ்கிரிப்டை கொடுத்து சிவா படித்து ஓகே பண்ணுனதுக்கு அப்புறம் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கிறது. ஆனால் படம் ரொம்ப ஸ்லோவாக போகிறது என சிவகார்த்திகேயன் எண்ணியதால் தன்னுடைய படம் எப்பொழுதும் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல ஸ்பீடாக இருக்க வேண்டும் என நினைத்து தலையிட்டதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட ஒரு வாரம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பு மறுபடியும் நேற்றிலிருந்து ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கு முதல் காரணம் லோகேஷ் தானாம். லோகேஷும் அஸ்வினும் ரூம் மெட்ஸாம். இந்த பிரச்சினையறிந்த லோகேஷ் தன் நண்பன் அஸ்வினுக்காக சிவகார்த்திகேயனிடம் பேசி அஸ்வினின் திறமைகளை எல்லாம் சொல்லி சிவகார்த்திகேயனை சமரசம் செய்து மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க செய்திருக்கிறாராம் லோகேஷ்.