நீயா? நானா? வா.. மோதிப் பார்ப்போம்!.. சம்பளத்தை ஏத்துவதில் சண்டை போடும் லோகேஷ் - அட்லீ!..

தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம் எப்படி உயர்கிறதோ அப்படி ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் சம்பளமும் படத்துக்கு படும் ஏறிக்கொண்டேதான் போகிறது. ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என சொல்லும் பழமொழியை நடிகர்களோடு சேர்ந்து இயக்குனர்களும் பின்பற்றி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் பெரிய இயக்குனர்கள் யார் என பார்த்தால் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சொல்லலாம். இதில், மணிரத்னம் மட்டுமே அவரே தயாரிப்பாளராக இருக்கிறார். மற்றவர்கள் மட்டுமே சம்பளமாக வாங்குகிறார்கள்.

இதையும் படிங்க: இரண்டு நாளுக்கு தான் இந்த பில்டப்பா… அஜித் படக்குழுவால் கடுப்பான ரசிகர்கள்…

நடிகர்களை போலவே இயக்குனர்களிடையேயும் யார் அதிக சம்பளம் வாங்குவது என்கிற போட்டி நிலவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறியிருக்கிறார். இவருக்கும் சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது.

ரஜினியை வைத்து அவர் இயக்கவுள்ள கூலி படத்தில் அவருக்கு சம்பளமாக ரூ.60 கோடி பேசப்பட்டிருக்கிறது. விஜயை வைத்து லோகேஷ் இயக்கிய லியோ படத்தில் 20 கோடி சம்பளம் வாங்கினார். தற்போது 40 கோடி அதிகமாக வாங்குகிறார். ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சனுக்கு 22 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இதை சொல்லித்தான் லோகேஷ் 20 கோடி வாங்கினார் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே டான்ஸ் தான் மொத்த கேரியரும் காலி… வடிவேலுவால் வாழ்க்கை தொலைத்த ஸ்ரேயா…

ஒருபக்கம், ஷங்கரின் சிஷ்யரான அட்லி சம்பளத்தோடு சேர்த்து லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பங்காக வாங்கி கொள்கிறாராம். இதனால், படத்தின் வசூலை பொறுத்து அவருக்கு 75 கோடி முதல் 100 கோடி வரை வரும் என சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் முதலிடத்தில் அட்லியே வருவார் என சொல்லப்படுகிறது.

ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 1200 கோடியை தாண்டி வசூல் செய்தது. எனவே, அட்லிக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வருகிறது. அதேநேரம், கூலி படம் ஹிட் அடித்தால் லோகேஷ் தனது சம்பளத்தை 75 கோடியாக ஏற்றிவிடுவார் எனவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story