இது மத்தவங்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா...? லோகேஷின் பக்கா மாஸ்டர் ப்ளான்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று வாரங்களை கடந்த நிலையிலும் இப்படத்திற்காக எதிர்பார்ப்புகள் குறைந்த பாடில்லை.
தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் முந்தைய படங்களின் தாக்கத்தை கொண்டுவரும் லோகேஷ் விக்ரம் படத்திலும் கைதி படத்தின் கதாபாத்திரங்களை காட்டி மேலும் மெருகேற்றியுள்ளார். மேலும் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை கமலை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால் இந்த படத்தில் அமராக நடித்திருக்கும் ஃபகத் பாசிலின் கதையை மட்டும் பிரித்து அதை ஒரு தனி படமாக சித்தரிக்கப் போவதாக லோகேஷ் எண்ணியுள்ளாராம். அமரின் முந்தைய கதை எப்படி இருக்கும் என காட்டும் படமாக இருக்கும் என்கிறார்கள்.
ஏற்கெனவே கைதியில் டில்லி கதாபாத்திரத்தை மட்டும் வைத்து கைதி இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக கூறியிருந்தார். இந்த வரிசையில் விக்ரம் படத்தில் அமர் கதாபாத்திரம் மட்டும் ஒரு படமாக போகுதாம். அப்படி பார்த்தால் விக்ரமில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் அமரை மட்டும் குறிவைப்பது லோகேஷின் பக்கா மாஸ்டர் ப்ளானாகத்தான் இருக்கும் என்கிறார்கள் திரையுலக வட்டாரங்கள்.