More
Categories: Cinema News latest news

லோகேஷுக்கு முட்டுக்கட்டை போட்ட கமல்.! விஜய் 67 நடக்குமானு தெரியலையே.?!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களால் தேடப்பட்டு வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எண்ணம் பலருக்கும் எழுந்து வருகிறது.

Advertising
Advertising

இவர் தற்போது விக்ரம் எனும் கமல்ஹாசன் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனே தனது ராஜ் கமல் நிறுவனம் சார்பாக தயாரித்தும் வருகிறார். இந்த திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

கமல்ஹாசன் தனது பட நிறுவனம் மூலம் தனது படத்தை மட்டுமின்றி, வேறு ஹீரோ படங்களையும் தயாரிக்க ஆர்வமாக இயங்கி வருகிறார். அதற்கேற்றாற் போல சிவகார்த்திகேயனின் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்களேன் – அதென்ன., வாயில் சொருகி வைச்சிருக்கார்.?! உங்களுக்கு இதெல்லாம் தேவைதானா சந்தானம்.?!

இந்த படத்தை அடுத்து ஒரு பெரிய ஹீரோ படத்தை இயக்க எண்ணிய கமலுக்கு ஓர் எண்ணம் தோன்றியுள்ளது. அதாவது, லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அந்த படத்தை மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கமல், லோகேஷிடம் ஓர் யோசனை கூறியுள்ளாராம். விஜய் படத்தை தானே தயாரிக்கிறேன் என கூறி அதற்கான பேச்சுவார்த்தையில் இறங்க லோகேஷை விஜயிடம் தூது அனுப்பினாராம் கமல். இதில் என்ன பதில் வர போகிறது. அடுத்த விஜய் படத்தை லோகேஷ் இயக்குவாரா , அதனை கமல் தயாரிப்பாரா எனபதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Manikandan

Recent Posts