lokesh
கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் லோகேஷ் கனகராஜை இளசுகளுக்கு பிடித்த இயக்குனராக மாற்றியது. அவரின் படங்களை LCU என ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால், லியோ படத்தின் இரண்டாம் பாதி, கூலி படத்தின் கதை, திரைக்கதை நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. எனவே, லோகேஷின் மவுசு கொஞ்சம் குறைந்திருக்கிறது.
கூலி படத்திற்கு பின் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்தை லோகேஷ் இயக்குகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், கூலி ரிசல்ட்டால் மனம் மாறிய ரஜினிக்கு அதில் விருப்பமில்லை எனவும், தொடர்ந்து ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களில் நடிப்பதில் அவருக்கு விருப்பமில்லை எனவும் சொல்லப்பட்டது.
எனவே, லோகேஷ் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது, இப்போதைக்கு தமிழ் நடிகர்கள் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க முன்வர மாட்டார்கள் என்பதால், தெலுங்கில் பிரபாஸ், பவன் கல்யாண் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் லோகேஷ் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
அதன்பின் சில நாட்கள் கழித்து அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் சொன்ன கதையை பிடித்துவிட்டதால் அட்லி படம் முடிந்தபின் அவர் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பார் எனவும், அது சூர்யாவிடம் லோகேஷ் சொன்ன இரும்புக்கை மாயாவி கதை எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தன், இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகர் அமீர்கான் ‘லோகேஷ் கனகராஜ் என்னிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். மும்பையில் இருவரும் விரைவில் சந்திக்கவிருக்கிறோம். எல்லாரும் சரியாக அமைந்தால் அவரின் இயக்கத்தில் நடிப்பேன். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றாலும் லோகேஷின் இயக்கத்தில் நான் ஒரு படம் நடிப்பது உறுதி’ என்று சொல்லியிருக்கிறார். எனவே லோகேஷ் அடுத்து இயக்கப்போகும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பாரா அல்லது அமீர்கான் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…