ராஜமெளலி, ஷங்கரை தொடர்ந்து ராம்சரணின் பார்வை யார் மீது தெரியுமா? தெரிஞ்சா அசந்துடுவீங்க!
ராஜமெளலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ராம்சரண், அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஆர்.சி 15வது படத்தில் நடித்து வருகிறார்.
அதிகாரி என தலைப்பு வைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் அந்த படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் படம் முழுமையடைந்து அடுத்த ஆண்டு ரிலீசுக்கு ரெடியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராம்சரணின் பார்வை அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் சலார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆரை பிரசாந்த் நீல் இயக்கப் போகிறார்.
இந்நிலையில், அதே போல ஒரு இயக்குநரை தேடிக் கொண்டிருந்த ராம்சரண் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடித்த விக்ரம் படத்தை பார்த்து மிரண்டு போயுள்ளார்.
தான் தேடிக் கொண்டிருந்த இயக்குநர் இவர் தான் என உடனடியாக தனது தந்தையிடம் டிஸ்கஸ் செய்ய, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசனை நேரிலையே அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
இந்த திடீர் சந்திப்புக்கு பின்னணியில் இப்படியொரு விஷயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தளபதி 67 படத்தை முடித்து விட்டு ராம்சரணின் படத்தை ஆரம்பிப்பார் லோகேஷ் கனகராஜ் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விக்ரம் படத்தின் கனெக்ஷன் இருந்தாலும், தனக்கு பரிபூரண சம்மதம் என ராம்சரணே க்ரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில், அவருக்கான மாஸ் கதாபாத்திரத்தையும் கதையையும் உருவாக்க லோகேஷ் கனகராஜ் யோசித்து வருகிறாராம்.
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விக்ரம் படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசிலை நடிக்க வைத்துள்ள நிலையில், அடுத்ததாக டோலிவுட்டின் முன்னணி நடிகர் ராம்சரணையும் தனது படத்தில் இணைத்துக் கொண்டால் லோகேஷ் கனகராஜின் ரேஞ்சே வேறலெவலில் சென்றுவிடும்.