தற்போதைய இந்திய சினிமா அளவில் மிகவும் தேடப்பட்டு வரும் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். அவருக்கு தற்போது இந்திய அளவில் மார்க்கெட் உயர்ந்து உள்ளது என்றே கூறலாம். இதுவரை தோல்வியே காணாத இயக்குனர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகிறார். லோகேஷ் கனகராஜ் அவர் எப்படி வளர்ந்து வருகிறாரோ அதேபோல் அவரை சுற்றியுள்ளவர்களும் வளர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம்.
அதற்காக தற்போது ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் அவரே ஆரம்பிக்க உள்ளாராம். அதன்மூலம் அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலருக்கு இயக்குனர் வாய்ப்பை அவர் வழங்க உள்ளாராம்.
இதையும் படியுங்களேன் – ஒரு படம் ஹிட்டான உடன் அதேயே ஃபாலோ செய்றீங்களே.?! சிவகார்த்திகேயன் செஞ்சதை பாருங்க…
இதற்காக தனது உதவி இயக்குனர்களிடம் அவரே குழு அமைத்து கதை கேட்டு வருகிறாராம். இதற்கு முன்னர் இதே போல இயக்குனர் ஷங்கரும் ஒரு பட நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் தனது உதவி இயக்குனர்களை இயக்குனராக அறிமுகப்படுத்தினார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இதேபோல தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, அதில் உதவி இயக்குனர்கள் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை பின்பற்றி வரும் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமாவில் பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…