லியோவ குழில புதைச்சாச்சு! மறுபடியும் அப்படி ஒரு படமா? ‘ரஜினி 171’ அப்டேட் சொன்ன லோகி

Published on: April 22, 2024
rajini
---Advertisement---

Actor Rajini 171: சமீபகாலமாக ரஜினி பக்கா ஆக்‌ஷன் நிறைந்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். வயது ஒரு பொருட்டு இல்லை என்பதற்கு உதாரணமாக ரஜினி வாழ்ந்து வருகிறார். இந்த வயதிலேயும் அவர் படங்களை பார்ப்பதற்கு ரசிகர் கூட்டத்தை வரவழைக்கிறார் என்றால் சினிமாவிற்காக எந்தளவுக்கு தன்னை ஈடுபடுத்தி வருகிறார் என்பது தெரிகிறது.

அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஜெயிலர்’. நெல்சன் செய்த மேஜிக் ரஜினியை இந்தியா முழுவதும் கொண்டாட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 700 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் ரஜினி. இப்படி கேமியோ ரோலில் தலைவரை காட்டி அவரது மகள் தவறு செய்து விட்டாரே என்று ரசிகர்கள் நொந்துதான் மிச்சம்.

இதையும் படிங்க: கில்லி எஃபெக்ட்!.. திரிஷாவை பார்க்க கேரவனை முற்றுகையிட்ட ரசிகர்கள்.. எந்த இடம்.. என்ன படம் தெரியுமா?

அடுத்ததாக த.ச. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரடக்‌ஷன் வேலைகளில் இறங்கியிருக்கிறது. வேட்டையன் படத்தை அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் பகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியார் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

வேட்டையன் திரைப்படத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு ஆழமான கருத்தை ரஜினி சொல்வதாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஞானவேல் படம் என்றாலே சமூக கருத்தை உள்ளடக்கிய படமாகத்தான் இருக்கும். இந்த நிலையில் வேட்டையன் படத்திற்கு பிறகு ரஜினி இணையும் படம் லோகேஷ் கூட்டணியில்தான், இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க: தனியா ஓடுற குதிரை இல்லை விஜய்!.. 3 குதிரை ஓடினாலும் தனியா தெரியுற குதிரை!.. இயக்குநர் பாராட்டு!

இன்று ரஜினி 171 பற்றி ஒரு அப்டேட் வரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஒருவேளை போஸ்டர் அல்லது டைட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி 171 குறித்து லோகேஷ் ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது கமல் சாரின் ரசிகனாக இருக்கலாம். ஆனால் சிறு வயதில் இருந்தே ரஜினியின் படங்களை காட்டித்தான் எனக்கு ஊட்டி வளர்த்தார்கள்.

அண்ணாத்த படம் வரைக்கும் ரஜினியின் படங்களை எல்லாம் FDFS ஷோவில்தான் பார்த்திருக்கிறேன். ரஜினி சாரை பற்றி ஒன்னு நினைச்சிருக்கேன். அதை ரஜினி171 படத்தில் காட்டுவேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் ஒரு எக்ஸ்ப்ரிமெண்டல் படமா? லியோவை இப்படி சொல்லித்தான் நாசமாக்கினார். இப்ப ரஜினி படமா? என்று கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன அமல் டேவிஸ்!.. சச்சின் இல்லாத நேரம் பார்த்து ரீனுவுக்கு ரூட் விடுறியா.. காண்டான ஃபேன்ஸ்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.