20 நாட்களில் ஆரம்பமாகும் லோகேஷ் படம்… இழுத்துக்கொண்டேப் போகும் “வாரிசு”… தளபதி என்ன பண்ணப்போறாரோ??
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், குஷ்பு, யோகி பாபு என பலரும் நடித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது எனவும் ஆதலால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாகவும் தகவல் வந்தது. எனினும் சில நாட்களிலேயே அவர் உடல் நலம் திரும்பியதாகவும் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் செய்திகள் தெரிவித்தன.
இதனிடையே இயக்குனர் வம்சி, விஜய்யிடம் 40 நாட்கள் எக்ஸ்ட்ராவாக கால்ஷீட் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் “தளபதி 67” திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்படும் எனவும் தகவகள் வந்தன. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளதாம்.
“தளபதி 67” திரைப்படத்தை லேகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் இன்னும் இருபதே நாட்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் இத்திரைப்படத்திற்கான செட்டுகள் போடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
“வாரிசு” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் அதிக நாட்கள் படப்பிடிப்பிற்கான கால்ஷீட்டையும் விஜய்யிடம் இருந்து பெற்றுள்ளார் இயக்குனர் வம்சி.
இந்த நிலையில்தான் “தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடிவடையாத நிலையில், விஜய் “தளபதி 67” படப்பிடிப்பில் எப்படி கலந்துகொள்ளப்போகிறார்? இல்லை லேகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை தள்ளி வைத்துவிடுவாரா? என்பதெல்லாம் இனி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து "மாஸ்டர்" என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார். அதே போல் "தளபதி67" திரைப்படமும் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர்.