தளபதி 67 படத்துக்கு இத்தனை நாள் படப்பிடிப்பா?!..மணிக்கிட்ட டியூசன் போகணும் லோகேஷ் கனகராஜ்...

by சிவா |
vijay
X

vijay

சில இயக்குனர்கள் குறுகிய காலத்தில் திரைப்படங்களை எடுத்து முடித்துவிடுவார்கள். சில இயக்குனர்கள் பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்துவார்கள். சில சமயம் சில திரைப்படங்களின் படப்பிடிப்பு வருடக்கணக்கில் எல்லாம் நடக்கும்.

lokesh

கேஸ் ரவிக்குமர், ஹரி போன்ற இயக்குனர்கள் மிகவும் வேகமாக படத்தை எடுத்து விடுவார்கள். இதனால் தயாரிப்பாளருக்கு செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும். ஷங்கர், பாலா, செல்வராகவன், கவுதம் மேனன், அட்லீ போன்ற சில இயக்குனர்கள் பல மாதங்கள் திரைப்படங்களை இயக்குவார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

vijay

vijay

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கியுள்ள விஜய் படத்தின் படப்பிடிப்பு 170 நாட்கள் என திட்டமிட்டுள்ளாராம். லோகேஷ் கனராஜ் வேகமாக படம் எடுப்பவர் என்கிற பெயரை பெற்றவர். எனவே, இந்த செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2 பாகங்களையும் 150 நாட்களில் முடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அனுபவசாலிக்கும், இப்போதுள்ள இயக்குனர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என கோலிவுட் வட்டாரம் பேச துவங்கியுள்ளது.

விக்ரமுக்கு பின் லோகேஷ் இயக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தில் பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்கவுள்ளது. விஷால் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story