ஜெயிலர் ஹிட்டுக்கு பின் லியோவில் நடந்த மாற்றம்!.. வெறித்தனமா வேலை பாக்கும் லோகேஷ் கனகராஜ்..

ஜெயிலர் படம் மூலம் ரஜினி கொடுத்துள்ள வெற்றி திரையுலகில் பலரையும் தூங்கவிடாமல் செய்துள்ளது. ரஜினி அவ்வளவுதான்.. இனிமேல் விஜய்தான் சூப்பர்ஸ்டார் என பேசியவர்கள் எல்லோருக்கும் ‘எப்பவும் நான் டாப்பு’ என சொல்லாமல் சொல்லிவிட்டார் ரஜினி.

ரஜினியை நக்கலாக பேசியவர்கள் எல்லாம் ஜெயிலர் பட வசூலை பார்த்து வாய் பிளந்து அமைதியாகி விட்டனர். தியேட்டர் வசூல் மட்டுமே ரூ.600 கோடியை தாண்டிய நிலையில் சேட்டிலைட், ஓடிடி, இசை மற்றும் மற்ற மொழி உரிமைகள் எல்லாம் சேர்த்தால் ஜெயிலர் படத்தின் வியாபாரம் ஆயிரம் கோடியை தொடும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஆப்பு வைக்க யாரும் வேணாம்… நீங்களே போதும்.. வெங்கட் பிரபுவால் கடுப்பான தளபதி!

அதாவது ‘எப்போதும் நான்தான் சூப்பர்ஸ்டார்’ என சொல்லிவிட்டார் ரஜினி, ஜெயிலர் பட ஆடியோ விழாவில் பேசியது போல் தான் எப்போதும் உயர பறக்கும் பருந்து என காட்டிவிட்டார். இப்போது விஜய் லியோ படம் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

லியோ படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடி வியாபாரம் என சிலர் கொளுத்தி போட்டாலும் அது உண்மையா என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். ஒருபக்கம், லியோ படம் ஜெயிலர் பட வசூலை முறியடித்து ஆயிரம் கோடியை தாண்டும் என சிலரும், அது நடக்க வாய்ப்பே இல்லை என சிலரும் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயை ஹைப் பண்ண ஒரு கூட்டமே வேலை செய்யுது!.. எல்லாமே பொய்!. பொளந்து கட்டும் நடிகர்…

ஒருபக்கம் ஜெயிலர் படத்தின் மெகா வெற்றி லியோ படக்குழுவை வேகமாக ஓட வைத்துள்ளது. சில காட்சிகளை மீண்டும் எடுக்கவும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ராப்பகலாக வேலை பார்க்கும் லோகேஷ் ஒரு நாளை 3 மணி நேரம் மட்டும்தான் தூங்குகிறாராம்.

லியோ படத்தின் வசூல் ஜெயிலரை தாண்டா விட்டால் ரஜினிதான் சூப்பர்ஸ்டார் என்பது மீண்டும் நிரூபிக்கப்படும் என்பதால் படக்குழுவே பதட்டத்தில் இருக்கிறதாம். பாவம் இதில் லோகேஷ் கனகராஜ் தலைதான் உருள்வதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: சோலிய முடிச்சுருவாங்கே போல! விமான நிலையத்தில் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி – ‘லியோ’வை காலிபண்ண இதுவே போதும்

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it