‘இனிமேல்’ நீ அவ்ளோதான் ராசா.. கடுப்பில் வெளியானதுதானா ரஜினி 171 போஸ்டர்? பொட்டிப் பாம்பாக சுருண்ட லோகி

Rajini 171: நேற்று தடாலடியாக வெளியானது ரஜினி 171 படத்தின் போஸ்டர். எந்தவொரு கேப்சனும் இல்லாமல் ரஜினி புகைப்படத்துடன் மட்டுமே இந்த போஸ்டர் வெளியானது. ரஜினியின் நடிப்பில் ஏற்கனவே வேட்டையன் திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. த.ச.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி இந்தப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு ரஜினியே லோகேஷுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு இப்போது அது ரஜினி171 படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. விஜய் அஜித் போட்டி எப்படி களோபரமாக இருக்கிறதோ அதை போலத்தான் ரஜினி கமல் போட்டியும். விக்ரம் படத்தை எடுத்து பெரிய அளவில் வெற்றியை கமலுக்கு கொடுத்த மாதிரி தனக்கும் கொடுக்க வேண்டும் என ரஜினி ஆசைப்பட்டதாக மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: இவங்களாம் ரிஜக்ட் பண்ண கதையா? திடீரென வெளியான சூர்யா 44 அப்டேட்.. இத்தனை விஷயம் இருக்கா?

இந்த நிலையில் நேற்று ரஜினி படம் மட்டுமில்லாமல் சூர்யாவின் 44வது பட அப்டேட்டும் வந்து ரசிகர்களை திணறடிக்க வைத்திருக்கிறது. திடீரென ஏன் லோகேஷ் ஒரு டீஸர் கூட வெளியிடாமல் சாதாரண போஸ்டரை வெளியிட்டார் என்ற கேள்வி அனைவரும் எழுப்பினர். அதற்கு காரணமே ரஜினிதான் என செய்யாறு பாலு கூறினார்.

ஏனெனில் கொஞ்ச நாள்களாகவே லோகேஷ் கமலுடனேயே சுற்றுவதையே பார்க்க முடிகிறது. அதுவும் சுருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் சாங் சம்பந்தப்பட்ட வேலைகளில் லோகேஷ் ஈடுபட்டிருந்ததால் ரஜினி கொஞ்சம் டென்சனாகி விட்டதாகவும் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை வைத்து 18 படங்கள்!.. கேப்டனை ஸ்டாராக மாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகர்..

அதனால்தான் இனிமேல் இனி போதும். நம்ம பட வேலையை ஆரம்பிப்போம் என ரஜினி லோகேஷை அழைத்து ஒரு அறிவிப்பை வெளியிடுமாறு கூறியதாக செய்யாறு பாலு கூறினார். அதனாலேயேதான் அவசர அவசரமாக இந்த போஸ்டரை லோகேஷ் வெளியிட்டார் என்றும் செய்யாறு பாலு தெரிவித்தார்.

 

Related Articles

Next Story