வாய் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட சினிமா பிரபலம்.. தலைவர் ரசிகர்களை குளிர வைத்த லோகேஷ் கனகராஜ்!..

by Saranya M |   ( Updated:2023-10-14 08:31:02  )
வாய் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட சினிமா பிரபலம்.. தலைவர் ரசிகர்களை குளிர வைத்த லோகேஷ் கனகராஜ்!..
X

Thalaivar 171 - நடிகர் ரஜினிகாந்தை ரிட்டையர்டு சூப்பர் ஸ்டார் என பேசி ரஜினி ரசிகர்கள் வீட்டிற்கே வந்து அதட்டி விட்டு செல்லும் நிலைக்கு ஆளான வலைப்பேச்சு பிஸ்மி தொடர்ந்து தலைவர் 171 ஆவது படம்தான் ரஜினியின் கடைசி படம் என கூறி வரும் நிலையில், அதே கேள்வியை லோகேஷ் கனகராஜ் இடமும் வைத்து மொக்கை வாங்கியதுதான் மிச்சம் என ரஜினி ரசிகர்கள் தற்போது அவரது பேட்டி வீடியோக்களை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

லியோ படத்தை முடித்துவிட்டு அந்தப் படத்தை ப்ரோமோஷன் செய்ய கடுமையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அல்லும் பகலும் உழைத்து வருகிறார். படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட யாருமே பேட்டி கூட கொடுக்காத நிலையில் தனது படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதற்காக லோகேஷ் கனகராஜ் போராடி வருகிறார்.

இதையும் படிங்க:கலக்கிட்ட கண்ணா!. லோக்கியை கொண்டாடிய ரஜினி!. தலைவர் 171 படம் இப்படித்தான் இருக்குமாம்…

ஆனால் அடுத்ததாக அவர் இயக்க உள்ள ரஜினிகாந்தின் தலைவர் 171 வது படம் பற்றிய கேள்விகளை தான் தொகுப்பாளர்கள் கேட்டு வருகின்றனர். தலைவர் 171 வது படம் எல்சியூ இல்லை என்று கூறிய லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 ஆவது படம்தான் ரஜினிகாந்தின் கடைசி படமா என பிஸ்மி கேட்டதற்கு? அப்படியெல்லாம் எந்த தகவலும் இல்லை என்றும் அடுத்தடுத்து ரஜினிகாந்தை இயக்கப் போவது யார் என்பது வரை தனக்குத் தெரியும் என பதிலளித்து மூக்கை உடைத்துள்ளார்.

தேவையில்லாமல் வாயைக் கொடுத்து எதை எதையோ புண்ணாக்கிக் கொண்டார் பிஸ்மி என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அடி வெளுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எப்பா கடவுளே இது ஒன்னு மட்டும் போதும்! ஆண்டவனிடம் ரஜினிக்கு இருக்கிற ஒரே வேண்டுதல் இதுதானாம்

Next Story