Connect with us

Cinema News

அப்போ கார்த்தி, விஜய், கமல் எல்லாம் லோகேஷ் கனகராஜை டார்ச்சர் பண்றாங்களா?.. என்ன மனுஷன் இப்படி புலம்புறாரே!

நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜிடம் கைதி 2 எப்போ வரும் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப அடுத்ததாக ஒரு படம் பண்றேன், அந்த படம் முடிந்ததும் கைதி 2 பண்ணுவேன் என்றார்.

உடனடியாக கமல் கூட படம் பண்ணிட்டீங்க அடுத்து ரஜினி கூட படம் பண்றதா பேசுறாங்களே என்கிற கேள்விக்கு அது தொடர்பான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும், நான் சொன்னா நல்லா இருக்காதுல்ல என ஹின்ட் கொடுத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் தான் இயக்கப் போகிறார் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஹாஷ்டேக்கை போட்டு கொண்டாடி வருகின்றனர்.

மேலும், எந்த நடிகருடன் வேலை பார்ப்பது உங்களுக்கு ரொம்பவே சுலபமாக இருந்தது என்கிற கேள்விக்கு உஷாராக ஸ்ரீ உடன் வேலை பார்ப்பது ஈஸி என தக் லைஃப் பதிலை சொல்லி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

ஜாவா சுந்தரேசன் போல:

ஸ்ரீ, ரெஜினி கசாண்ட்ரா, சந்தீப் கிஷன் நடித்த மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜுக்கு அடுத்ததாக மன்சூல் அலி கானை வைத்து கைதி படம் பண்ண அலைந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. திடீரென கார்த்தி அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த நிலையில், படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அதன் விளைவாக விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசன் உடன் விக்ரம் மற்றும் மீண்டும் விஜய்யுடன் லியோ அடுத்ததாக ரஜினிகாந்த் படம் என ஜாவா சுந்தரேசா போல லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி சில ஆண்டுகளிலேயே ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.

அடுத்து ரஜினிகாந்த் படம்:

விஜய் படங்களை இயக்கும் இயக்குநர்களுடன் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக பணியாற்றி வருகிறார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.

இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும் போதே அது பற்றி மறைமுகமாக அளித்த பதில் ரசிகர்களை கன்ஃபார்ம் பண்ண வைத்து விட்டது.

கார்த்தி, விஜய், ரஜினி டார்ச்சரா: 

பெரிய நடிகர்களுடன் படம் பண்ணும் போது இளம் இயக்குநர்களுக்கு பல சிக்கல்கள் உருவாகிறது என்பதையே மீண்டும் அழுத்தம் திருத்தமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாக அவர் சொன்ன ஸ்ரீயை வைத்து படம் இயக்குவது சுலபம் என்கிற பதிலை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கார்த்தி உடன் கைதி, விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் லியோ, மேலும், கமல்ஹாசன் உடன் விக்ரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினாலும், அவர்களில் ஒருவரது பெயரை கூட சட்டென சொல்லாமல் மாநகரம் படத்தில் நடித்த இளம் நடிகர் ஸ்ரீயின் பெயரை லோகேஷ் கனகராஜ் சொன்னதற்கு காரணமே பெரிய நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக இன்ஃப்ளூயன்ஸ் செய்வது தான் காரணம் என்கின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top