அமீர்கான் படத்தில் லோகேஷின் சம்பளம் இதுதான்!. அட்லிக்கே டஃப் கொடுக்கிறாரே!..

by சிவா |
lokesh
X

#image_title

குறும்படங்களை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ் இப்போது ரசிகர்கள் விரும்பும் ஒரு முக்கிய இயக்குனராக மாறி இருக்கிறார். இவரின் இயக்கத்தில் முதலில் வெளியான மாநகரம் படமே ரசிகர்களை கவர்ந்தது. அந்த படத்தில் நெருப்பு மீது நிற்பது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு கடத்தியிருந்தார் லோகேஷ்.

ஒரு இரவில் நடக்கும் கதை என ஆச்சர்யம் கொடுத்தார். அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய படம்தான் கைதி. இதுவும் ஒரு இரவில் நடக்கும் கதைதான். இந்த படத்திற்கு லோகேஷ் அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஒரு புது இருண்ட உலகை அவர் காட்டுகிறார் என பலரும் சொன்னார்கள்.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு தொடர்ந்து ஏழரை கொடுக்கும் ரஜினி!.. சூப்பர்ஸ்டார் செய்வது சரியா?…

சிலர் ஒரு படி மேலே போய் எல்.சி.யூ என சொன்னார்கள். அதாவது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ். கைதிக்கு பின் விஜயை வைத்து மாஸ்டர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் லோகேஷ். அதன்பின் கமலிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அப்படி உருவான திரைப்படம்தான் விக்ரம்.

கமலுக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது விக்ரம். எனவே, ஹிந்தி, தெலுங்கு மொழிகளின் பெரிய ஹீரோக்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். லோகேஷின் சம்பளமும் 20 கோடியில் இருந்து 50 கோடியாக உயர்ந்தது. விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார்.

இதையும் படிங்க: போன இடத்தில் உத்திரவாதம் கொடுத்தாரா விஜய்? கேப்டன் வீட்டில் நடந்தது என்ன?

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு போல ரஜினி படங்களுக்கே இல்லை என்பதே நிஜம். இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இதுவும் ஒரு அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில்தான், பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து ஒரு படத்தை இயக்க லோகேஷ் ஒப்புகொண்டிருக்கிறார். கூலி படத்திற்கு பின் கைதி 2, விக்ரம் ரிட்டன்ஸ் ஆகிய படங்களை இயக்கிவிட்டு அவர் ஹிந்திக்கு போவார் எனத்தெரிகிறது. இந்த படத்தை இயக்க 50 கோடி சம்பளம் மற்றும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என கேட்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். ஷாருக்கானை வைத்து ஜாவன் படத்தை அட்லீ இயக்கியபோது அவருக்கும் இப்படித்தான் சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story