லோகேஷ் கனகராஜ் வாங்கிய ஆயிரம் ரூபாய் சம்பளம்… அசூரத்தனமான வளர்ச்சின்னா அது இதுதான் போலயே!!

by Arun Prasad |
Lokesh Kanagaraj
X

Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் தற்போது இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வருகிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது நடந்தால் கூட அது ஒரு செய்திதான். அவர் இயக்கிவரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதை பலரும் அறிவார்கள்.

Leo

Leo

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் “லியோ” படப்பிடிப்பில் கலந்துகொண்டார். லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் ஒரு பக்கம் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

5 லட்சம் சம்பளம்

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் இந்தியாவின் மிக முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். எனினும் லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் இயக்கிய “மாநகரம்” திரைப்படத்தில் அவர் வாங்கிய சம்பளத்தை குறித்து ஒரு தகவல் வெளிவருகிறது.

Kaithi

Kaithi

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கிய “மாநகரம்” திரைப்படத்தில் அவருக்கு 5 லட்சமே சம்பளமாக தரப்பட்டதாம். 3 வருடங்கள் இத்திரைப்படத்திற்காக பணியாற்றினாராம் லோகேஷ். அதன்படி பார்த்தால் மாதத்திற்கு சில ஆயிரங்களில்தான் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாராம். அதன் பின் “கைதி” திரைப்படத்திற்கு 75 லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றாராம்.

அசூர வளர்ச்சி

Vikram

Vikram

“கைதி” திரைப்படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து “மாஸ்டர்” திரைப்படத்திற்கு இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார்களாம். இதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து தற்போது “லியோ” திரைப்படத்தில் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம் லோகேஷ் கனகராஜ். இந்த வளர்ச்சி மிகவும் அசூரத்தனமான வளர்ச்சியாக இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினியை பார்த்தாவது கத்துக்கனும்… சிம்பு மேடையில் அழுவதை இனியாவது நிறுத்துவாரா?…

Next Story