சூரி அண்ணனோட வளர்ச்சியை பார்த்து அசந்துப்போயிட்டேன்!.. கூலி பட இயக்குநர் சொன்ன செம மேட்டர்!..

#image_title
நடிகர் சூரி முதல் முறையாக கதை எழுதி நடித்துள்ள மாமன் படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூரியை பற்றி பேசியிருப்பாது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரோட்டா சூரியாக பிரபலமான இவர் அஞ்சான், பூஜை, அரண்மனை 2, சிங்கம் 3, வேதாளம், ஜில்லா ஆகிய பல படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தார். அதை தொடர்ந்து தற்போது விடுதலை 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
அதையடுத்து லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படம் ஒரு அதிரடி குடும்ப படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாமன் படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதில் லோகேஷ் கனகாராஜ் கலந்துக்கொண்டு பேசும்போது, சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்த்து அனைவரும் மகிழ்கின்றனர், இப்படி மற்றவர்களின் எந்த வெறுப்பும் இல்லாமல் இவர் வளர்ந்திருப்பது தான் உண்மையான வளர்ச்சி என நான் நினைக்கிறேன். என்னுடைய புரொடக்ஷன் கம்பெனியில் சின்ன சின்னதா படங்கள் தயாரிக்கலாம் என நினைத்தேன் அதற்காக 10 கதை வந்தால் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதிட்டு வராங்க. இந்த வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி. அவர் மேலும், வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பேசியுள்ளார்.