சும்மா கஷ்டப்பட்டேன்னு எப்போதும் சொல்லிட்டு இருக்க கூடாது.. – இளம் இயக்குனர்களுக்கு லோகேஷ் கனகராஜின் அட்வைஸ்!

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அவரது முதல் படமான மாநகரம் திரைப்படத்தில் இருந்தே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் நல்ல ஹிட் கொடுத்து வருகின்றன.
ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ஒரு வங்கியில் ஊழியராக பணிப்புரிந்து வந்தார். லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் இயக்கி வந்தபோது லோகேஷ் கனகராஜும் ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார். அப்போதில் இருந்தே அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தது.
அதன் பிறகு ஒரு வழியாக சினிமாவில் வாய்ப்பை பெற்று இயக்குனர் ஆனார். ஒரு பேட்டியில் இதுக்குறித்து அவரிடம் பேசும்போது இயக்குனர் ஆவதற்கு முன்பு என்னவெல்லாம் கஷ்டப்பட்டீர்கள் என கேட்கப்பட்டது.

vijay lokesh
அதற்கு லோகேஷ் கனகராஜ் பதிலளிக்கும்போது “முதலில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக நான் கஷ்டப்பட்டேன் என யாரும் கூறாதீர்கள். சினிமாவில் 30 வருடங்கள் ஆகியும் வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள். நம்மை விட கஷ்டப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
எனவே அந்த வார்த்தையை பயன்படுத்துவது தவறு” என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.