Connect with us
lokesh

Cinema News

ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க!.. புதிய அவதாரமெடுக்கும் லோகேஷ் கனகராஜ்!.. பங்கம் செய்த சினிமா பிரபலம்..

Lokesh kanagaraj: வங்கியில் வேலை செய்து வந்த லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும், இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்வது கஷ்டம் என்பதால் குறும்படங்களை எடுக்க துவங்கினார். அவர் வேலைசெய்து வந்த வங்கி மேலதிகாரியையே தயாரிப்பாளராக்கி முதல் குறும்படத்தை எடுத்தார். இதற்கு அவர் வாங்கிய முதல் சம்பளம் 3 ஆயிரம்.

அதன்பின் சில கதைகளை எழுதி திரைப்படமாக எடுக்க நினைத்து பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதையை சொல்லி வாய்ப்பு கேட்டார். அனுபவம் இல்லாததால் அவரை யாரும் நம்பவில்லை. ஒருவழியாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரை நம்பினார். அப்படி உருவான திரைப்படம்தான் மாநகரம்.

இதையும் படிங்க: சிம்புவை தொடர்ந்து கவுதம் மேனனுக்கு எமனாக வந்த தனுஷ்!.. ஒருத்தர் விடாம அடிச்சா எப்படி?..

அந்த படம் பலருக்கும் பிடித்திருந்தது. அந்த படத்தை பார்த்த விஜய் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். கைதி படத்தை முடித்துவிட்டு விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து கமலை வைத்து விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் மூலம் லோகேஷுக்கு என ரசிகர்களே உருவாகிவிட்டனர்.

அடுத்து விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்போது ரஜினியின் 171வது படத்தை இயக்கும் பணியில் லோகேஷ் ஈடுபட்டிருக்கிறார். ஞானவேல் படத்தை முடித்தபின் ரஜினி லோகேஷின் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதையும் படிங்க: கை மாறிய அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் படம்!. என்னப்பா ஒரே டிவிஸ்ட்டா இருக்கே!…

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் இப்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். G Squard என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் துவங்கியிருக்கிறார். முதல்கட்டமாக தனது நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரிக்க போவதாகவும், தனக்கு கொடுத்த ஆதரவை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்’ என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

twitt

இதைத்தொடர்ந்து பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டர் பக்கத்தில் ‘Ganja Squard, Gangster Squard கதைகளை எடுக்காமல் வித்தியாசமான நல்ல படங்களை எடுக்க வாழ்த்துக்கள்’ என டிவிட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தில் அந்த நடிகர்!.. ஒருவழியா நடந்திடுச்சிப்பா!.. ஆசையை நிறைவேற்றிய லோகேஷ்..

google news
Continue Reading

More in Cinema News

To Top