கலக்கிட்ட கண்ணா!. லோக்கியை கொண்டாடிய ரஜினி!. தலைவர் 171 படம் இப்படித்தான் இருக்குமாம்…

Published on: October 14, 2023
thalaivar 171
---Advertisement---

Thalaivar 171 : திரையுலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு இயக்குனர் பரபரப்பாக பேசப்படுவார். அவர் இயக்கும் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்து அவர் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார்? என தொடர்ந்து அவர் பற்றிய செய்திகள் கவனிக்கப்படும். பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், மிஷ்கின் என பலரும் அப்படி இருந்தார்கள்.

அந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் படங்கள் எல்லோராலும் பரவலாக ரசிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. இவரின் இயக்கத்தில் வருகிற 19ம் தேதி வெளியாகும் லியோ படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் தாறுமாறாக எகிறி வருகிறது.

இதையும் படிங்க: லியோ பட கதை புதுசுன்னு நான் சொல்லவே இல்லையே!.. போட்டு தாக்கும் லோகேஷ் கனகராஜ்..

ஒருபக்கம், அடுத்து ரஜினியை வைத்து அவர் இயக்கப்போகும் படத்திற்கும் இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ரஜினி இப்போது தா.ச.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஞானவேல் என்பதால் இந்த படமும் சமூக பிரச்சனையை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்த பின் ரஜினி லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். இதற்கிடையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த லோகேஷ் கனகராஜிடம் ‘நீங்கள் ஒரு தீவிர கமல் ரசிகர்.. விக்ரம் படத்தில் கமலை இயக்கிவிட்டீர்கள். இப்போது அடுத்து ரஜினியை வைத்து படம் எடுக்க போகிறீர்கள். அதை எப்படி உணர்கிறீர்கள்?.. என கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: கொஞ்சமாவது மெனக்கெடும் விஜய்!.. அலட்டிக்காம கோடிகளை அள்ளிப்போடும் அஜித்!. அவருக்கு மச்சம்தான்!…

இதற்கு பதில் சொன்ன லோகேஷ் ‘நான் சிறுவனாக இருக்கும்போதே ரஜினி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை காட்டி கூட எனக்கு சாப்பாடு ஊட்டியிருப்பார்கள். நான் தீவிர கமல் ரசிகனாக இருந்தாலும் அண்ணாத்த உட்பட ரஜினி சார் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன்’

என் மனதில் ரஜினி சாரை இப்படி காட்ட வேண்டும் என ஒரு ஆசை இருக்கிறது. கண்டிப்பாக அது ஒரு பரிசோதனை முயற்சிதான். இதில் எல்.சி.யூ-வெல்லாம் கிடையாது. கண்டிப்பாக ஒரு தனி படமாக இருக்கும். இந்த கதையை ரஜினி சாரிடம் சொன்ன போது ‘கலக்கிட்ட கண்ணா’ என அவரின் ஸ்டைலில் சொல்லி என்னை கட்டி அணைத்துக்கொண்டார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவருக்கும் மகிழ்ச்சி’ என லோகேஷ் கூறினார்.

இதையும் படிங்க: ரஜினி போட்ட போன் கால் பார்த்த வேலை தானா இது?.. லியோ ரிலீசுக்கு இன்னும் என்னவெல்லாம் சிக்கல் வருமோ?.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.