More
Categories: Cinema News latest news

டைரக்டர் ஆகலன்னா இந்த வேலையத்தான் செஞ்சிருப்பேன்!. லோகேஷுக்கு இப்படி ஒரு ஆசையா?!…

Lokesh kanagaraj: வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு குறும்படங்களை எடுக்க துவங்கினார். அதன்பின் ஒரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர் தேடி அலைந்தார். எந்த இயக்குனரிடமும் அவர் உதவியாளராக வேலை செய்யவில்லை என்பதால் அவரை யாரும் நம்பவில்லை.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷையும், அவரின் கதையையும் நம்பியது. அப்படி உருவான திரைப்படம்தான் மாநகரம். குறைவான பட்ஜெட்டில் அழகாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை அதிர வைத்தார். இப்படம் மூலம் பாராட்டையும் பெற்றார் அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இத்தன பேர நடிக்க வச்சும் ஒருத்தரும் வரலயே!. இது என்னடா லியோ புரமோஷனுக்கு வந்த சோதனை!..

அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரே இரவில் நடிக்கும் ஒரு கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் என அதிரடி காட்டினார். விக்ரம் திரைப்படத்தில் அவர் காட்டிய உலகம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. எனவே, லோகேஷின் படங்களை லோக்கி யூனிவர்ஸ் என ரசிகர்கள் சொல்லதுவங்கிவிட்டனர்.

அதோடு, அவரின் முந்தை படங்களின் கதாபாத்திரத்தை அடுத்த படத்திலும் அவர் காட்டுவதை எல்.சி.யூ என ரசிகர்கள் சொல்கிறார்கள். தற்போது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக லோகேஷ் மாறிவிட்டார். விஜய வைத்து அவர் இயக்கி வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: லியோ கதை புதுசுன்னு நான் சொல்லவே இல்லையே!.. போட்டு தாக்கும் லோகேஷ் கனகராஜ்..

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘நான் எப்போதும் சண்டை இயக்குனர்கள் அன்பு – அறிவு அலுவலகத்தில்தான் இருப்பேன். அங்கே சண்டை கலைஞர்களுடன்தான் நேரம் செலவழிப்பேன். அங்கேதான் படுத்து தூங்குவேன். அப்போது ஸ்டண்ட் நடிகர்களின் வாழ்க்கையில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.

உயிருக்கே உத்தரவாதம் இல்லாத வேலை அது. அந்த ரிஸ்க் எனக்கும் பிடித்திருந்தது. ஒருவேளை நான் இயக்குனராகவில்லை எனில் ஸ்டண்ட் நடிகராகவோ, இல்லை ஸடண்ட் இயக்குனராகவோ இருந்திருப்பேன்’ என பேட்டியில் கூறியிருந்தார்.

Published by
சிவா

Recent Posts