Cinema News
‘லியோ’ பட ரிலீஸ் நேரத்தில் லோகேஷ் எடுத்த தில்லான முடிவு! இனிமேலாவது அடங்குவாங்களானு பார்ப்போம்
Lokesh About Fanswar: இன்று ஹாட் டாப்பிக்காக இருப்பது லியோ படம் பற்றியும் லோகேஷைப் பற்றியும்தான். அந்தளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை படம் ரிலீஸூக்கு முன்பாகவே ஏற்படுத்திவிட்டார் லோகேஷ். நாளை பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது லியோ திரைப்படம்.
எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு லியோ படத்திற்கு கடுமையான ப்ரோமோஷனை செய்து வருகிறார் லோகேஷ். அதுமட்டுமில்லாமல் திருப்பதி, ராமேஸ்வரம் என மிக முக்கியமான ஸ்தலங்களுக்கும் சென்று லியோ படத்திற்காக சாமி தரிசனமும் செய்து வருகிறார்.
இணையத்தில் எந்த சேனலை திறந்து பார்த்தாலும் லோகேஷின் பேட்டிதான் உலாவிக் கொண்டிருக்கிறது.போதாக் குறைக்கு அவருடைய உதவியாளரான ரத்னகுமாரின் பேட்டியும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: சஞ்சய் தத்துக்கே இந்த நிலைமைனா!.. திரிஷாவுக்கு?.. லியோ படத்தில போய் இப்டி செஞ்சிட்டீங்களே?
ஒவ்வொரு பேட்டியின் போதும் லோகேஷ் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லிக் கொண்டுதான் வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் சமீபகாலமாக தங்களுடைய நடிகர்தான் பெரியவர் என்ற எண்ணத்தில் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பதை பற்றியும் பேசியிருக்கிறார்.
அதாவது என் நடிகரின் படம்தான் அதிக வசூல் பெறும் என்ற ஒரு மன அழுத்தத்தில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் அது அவர்களின் ஆஸ்தான நடிகரின் சக்தியைக் காட்டுவதற்கான அவர்களின் உற்சாகத்தைக் காட்டுகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எல்லா கோட்டையும் அழிங்க… இதுதான் ஃபைனல்.. ஒருவழியாக அறிவித்த லியோ படக்குழு..!
அதே வேளையில் சில சமயம் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதால் சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிடலாம் என்ற முயற்சியில் இருப்பதாகவும் லோகேஷ் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது ஆரம்பத்தில் என்னுடையை பயோவில் லியோ டேக்கை எடுத்ததன் சர்ச்சை போய்க் கொண்டிருந்தது. அதற்காக நான் ஒவ்வொருவரிடமும் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
இதையும் படிங்க: இந்திய சினிமாவின் ஐகானாகவே மாறிய லோகேஷ்! லியோவில் அவர் வாங்கிய சம்பளம் தெரியுமா?
அதுமட்டுமில்லாமல் அனைத்து நடிகர், நடிகைகள், முக்கிய பிரபலங்களின் தொடர்பிலும் இருப்பதால் மற்ற நடிகர்களை விமர்சிக்கும் போது என்னுடைய பெயரையும் டேக் செய்து போடுகிறார்கள். நான் எதாவது அறிவிப்பை பார்க்க முயலும் போது தவறுதலாக அந்த விமர்சனத்தின் பக்கத்தை லைக் செய்யும் படியாக ஆகிவிடுகிறது.
உடனே அதை எடுத்து ஒரு பெரிய செய்தியாகவும் போட்டு விடுகிறார்கள். சினிமா என்பது வெறும் 2.30 மணி நேர பொழுது போக்கும் மட்டும்தான்.இதை ஒரு போர் போல ஆக்க வேண்டாம். அவரவர் வேலையை செய்தால் மட்டும் போதும் என அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.