கைதி2, விக்ரம் 2, ரோலக்ஸ்னு வரிசையா நிக்குது.. இதுல லோகேஷுக்கு வந்த திடீர் ஆசை

loki
Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சமீப காலமாக அவருடைய தோற்றத்தில் சில மாற்றங்கள் தெரிகிறது. மிகவும் ஸ்டைலாக அவர் அணியும் உடைகளில் இருந்து அவருடைய சிகை அலங்காரம் வரைக்கும் ஆரம்பத்தில் இருந்த லோகேஷுக்கும் இப்போது இருக்கும் லோகேஷுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. சில பேர் ஒருவேளை நடிகர் விக்ரமுடன் சேர்ந்து விட்டாரோ என்றெல்லாம் கிண்டல் அடித்து வருகின்றனர். அந்த அளவுக்கு தன்னுடைய உடைகளில் ஸ்டைலை கொண்டு வந்திருக்கிறார் லோகேஷ்.
சமீபத்தில் விமான நிலையத்தில் அவரை பார்த்ததுமே அனைவருக்கும் ஆச்சர்யம். இயக்குனர் லோகேஷா என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். தற்போது கூலி திரைப்படத்தை முடித்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் அதற்கு அடுத்தபடியாக கைதி திரைப்படத்தை இயக்கினார். ஒருநாள் இரவில் ஒட்டுமொத்த கதையையும் காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் லோகேஷ்.
அந்த படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அடுத்ததாக விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை எடுத்தார். அதுவும் மாபெரும் வெற்றி அடைந்த படமாக மாறியது. அதற்கடுத்தபடியாக கமலுடன் இணைந்தார் .கமலின் தீவிர ரசிகர் லோகேஷ். அதனால் ஒரு பேன் பாய் மொமண்டாக இந்த படம் அமைந்தது. அது கமல் கெரியரையே ஒட்டுமொத்தமாக மாற்றிய திரைப்படமாகவும் அமைந்தது என்று சொல்லலாம்.
விஜய், கமல் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்த லோகேஷ் தற்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் எப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக கைதி 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
லோகேஷ் லிஸ்டில் அடுத்தடுத்து விக்ரம் இரண்டாம் பாகம், சூர்யாவை வைத்து ரோலக்ஸ் என படங்கள் இருக்க திடீரென அவருக்கு ஒரு திடீர் ஆசை வந்துவிட்டது. நாமும் ஏன் ஹீரோவாக நடிக்க கூடாது என்று. அதனால் அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது .

ஏற்கனவே லோகேஷ் நான் குறிப்பிட்ட ஒரு பத்து படங்களைத்தான் எடுக்கப் போகிறேன். அதன் பிறகு பிரேக் எடுக்க போகிறேன் என்று கூறியிருந்தார். அதற்கு ரசிகர்கள் உள்பட பல திரைப்பிரபலங்கள் அதை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். இப்போது ஹீரோவாக நடிக்க போகிறார் என்றால் பத்து படங்களை இயக்கி விட்டு அடுத்ததாக ஹீரோவாக மாறிவிடுவாரோ என்று கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி அடிபட்ட வருகிறது.