இதுதான் என்னோட கடைசி படம்! லோகேஷ் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் வங்கிப் பணியாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த லோகேஷ் குறும்படங்களை தயாரித்து வந்தார். அந்த ஆசை வெள்ளித்திரை வரை அவரை இழுத்துச் சென்றது.
மாநகரம் என்ற ஒரு தரமான படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் தேடப்படும் இயக்குனராக மாறினார். அதன் பிறகு கைதி திரைப்படத்தை கொடுத்து அனைவரையும் சிறைப் படுத்தினார். மூன்றாவது படத்திலேயே மாஸ் ஹீரோ விஜயுடன் கூட்டணி அமைத்து தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்தார்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலாக 60 வருடங்களாக சினிமாவை ஆளும் உலக நாயகனை தன் இயக்கத்தில் நடித்து வைத்து அழகுப்பார்த்தார் லோகேஷ். விக்ரம் படம் தான் லோகேஷையும் சரி கமலையும் சரி ஒரு ஏணிப்படியின் உயரத்திற்கே கொண்டு சென்றது.
சினிமாட்டிக் யுனிவெர்ஸ்
இப்படி தான் எடுத்த நான்கு படங்களுமே தரமான சம்பவத்தை கோலிவுட்டில் செய்தது. அதுமட்டுமில்லாமல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற ஒரு புதிய முறையை லோகேஷ் தான் முதன் முதலில் உருவாக்கினார். இவரின் சினிமா ஆர்வம், மற்றும் எடுக்கும் விதம் இவற்றையெல்லாம் பார்த்த மற்ற மொழி நடிகர்களும் லோகேஷுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகின்றனர்.
கன்னட யஷ், ராம் சரண், என மற்ற மொழி சூப்பர் ஸ்டார்கள் அந்த லிஸ்டில் அடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷிடம் நடத்திய பேட்டி ஒன்றில் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறினார். அதாவது லோகேஷிடம் ‘ நீங்கள் சினிமாவிற்குள் வரும் போது 20 வருடம் அல்லது 50 வருடம் சினிமாவை ஆட்டிப் படைக்கும் என நினைத்து வந்தீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
லியோ படம்
அதற்கு பதிலளித்த லோகேஷ் ‘ நான் எந்த கனவோடும் வரவில்லை, சும்மா ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம் என்றுதான் வந்தேன், ஆனால் அதற்கு இவ்ளோ பெரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும் போது பெருமையாக இருக்கிறது, ஆனால் 20 வருடம் வரை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை, ஒரு பத்து படம் எடுத்து விட்டு அதோடு முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்று மிகவும் ஷாக்கான பதிலை கூறினார் லோகேஷ். இப்போது 5வது படமாக விஜயின் நடிப்பில் லியோ படத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜயை இயக்கும் அந்த ஜோசியர்.. மேல உட்கார்ந்துகிட்டு ஆட்டிப்படைக்கும் ஆசாமி..