தமிழில் வரிசையாக ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்து வரும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தற்சமயம் தமிழ் சினிமாவில் அவருக்குதான் டிமாண்ட் அதிகமாக உள்ளது.
விக்ரம் படம் கொடுத்த ஹிட்டை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஏற்கனவே வரிசையாக திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தற்சமயம் லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோவிற்கு பிறகு கைதி 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதற்கு பிறகு நடிகர் ரஜினியை வைத்து ஒரு படமும் விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் இயக்க உள்ளார். தெலுங்கு சினிமாவும் கூட தற்சமயம் லோகேஷ் கனகராஜ் படங்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.
அவர் இயக்கத்தில் வந்த படங்களிலேயே பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் விக்ரம். விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் முக்கிய காரணம் எனலாம். படம் வெளியாகும் முன்பே இந்த பாடல்களே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உருவாக்கின.
லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு உதவியவர்:
அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் உதவி இயக்குனர் விஷ்ணு ஏதவன். இவர் ஆரம்பக்காலம் முதலே லோகேஷ் கனகராஜுடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார். இவர் உதவி இயக்குனர் என்பதையும் தாண்டி நல்ல பாடலாசிரியர் என்பதை சமீபத்தில்தான் லோகேஷ் கனகராஜ் தெரிந்துக்கொண்டார்.
விக்ரம் படத்தில் வரும் போர்க்கண்ட சிங்கம் பாடலை இவர்தான் எழுதியிருந்தார். அதே போல நாயகன் மீண்டும் வரான் என்கிற பாடலையும் இவரே எழுதினார். மாஸ்டர் திரைப்படத்தில் வரும் பொலக்கட்டும் பற பற பாடலையும் இவர்தான் எழுதியிருந்தார்.
இதுக்குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும்போது லோகேஷின் வெற்றிக்கு காரணமாக இருப்பது அவரது படக்குழுதான். பல திறமையான ட்ராகன்களை அவர் உள்ளே வைத்துள்ளார். சமயம் வரும்போது அவர்களை வெளியிட்டு விடுகிறார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: துருவ் விக்ரமை ஓரங்கட்டிவிட்டு தனுஷை பிடித்த மாரி செல்வராஜ்? இவ்வளவு மெனக்கெட்டது எல்லாம் வேஸ்ட்டா?
Viduthalai part2:…
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…