Cinema News
விக்ரம் திருட்டு கதையா..? வசமா மாட்டிக் கொண்ட லோகேஷ் கனகராஜ்!..
தற்போது தமிழ் சினிமாவில் அதிக விருப்பத்திற்கும் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து விஜயுடன் மீண்டும் கூட்டணி அமைத்து லியோ படத்தை இயற்றி வருகிறார். இப்படம் பான் இந்தியா அளவில் உருவாகி வருகிறது. முன்னணி நடிகர்கள் பலரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதனால் இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் இயக்கிய கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கமலின் மாறுபட்ட நடிப்பும் வித்தியாசமான கதைக்களமும் மக்களிடையே வரவேற்பு பெற உதவியாக இருந்தது.
சமீபகாலமாக முன்னணி இயக்குனர்கள் திருட்டு கதைகளில் சிக்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி அவர் கடைசியாக இயக்கி வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் கதை திருட்டு கதை என சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது 2015 ஆம் ஆண்டு நெட் பிலிக்ஸ் தளத்தில் வெளிவந்த பெட்டர் கால் சோலின்(better call saul) கதையாக உள்ளது. இதில் மொத்தம் ஆறு சீசங்கள் உள்ளது. இதில் ஆறாவது சீசன் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெட்டர் கால் சோல் இதன் சிறப்பம்சமே அது பிரேக்கிங் பேட்(breaking bad) யூனிவெர்ஸ்ஸை கொண்டிருப்பது தான்.
இது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற தொடராகும். இது இரண்டு விதமான கதைகளை உள்ளடக்கியது. அதில் ஒன்று வழக்கறிஞர் ஒருவர் வாழ்க்கையில் நடக்கும் ஏமாற்றங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி எப்படி தனது லட்சியத்தை அடைகிறான் என்ற கதையை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருக்கும். மற்றொரு கதையாக குற்ற உலகில் ஈடுபடும் நபரின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் கதையாக அமைந்திருக்கும்.
அதாவது சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்கும் கூட்டத்திற்கு எதிராக செயல்பட்ட போலீஸ்காரனின் மகன் கொல்லப்படுகிறார். இதனால் தந்தை மன வேதனை அடைந்து மது பழக்கத்திற்கு அடிமையாகிறார். பின்னர் தன் மகனை கொன்ற கும்பலை பழிவாங்குகிறார். பின்னர் அந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து வேறொரு இடத்தில் தனது பேரப்பிள்ளைகளை பத்திரமாக காத்து வளர்ப்பது போல் இதன் கதை அமைப்பு இருக்கும்.
இதே போன்றுதான் விக்ரம் திரைப்படத்தின் கதையும் இருக்கும். இரண்டு திரை படத்தையும் பார்க்கும்போது கதை தொடர்பு ஒரே மாதிரியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கதை சொல்லும் சூழல் மற்றும் தன்மையை வேறுபடுத்தி லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை அமைத்திருப்பார்.
இந்நிலையில் பெட்டர் கால் சோல் மற்றும் வெட்கம் விக்ரம் திரைப்படத்தின் கதைகளின் ஒற்றுமையின் மூலம் இதுவும் திருட்டு கதை தான் போல என்று இணையதளத்தில் ரசிகர்கள் விவாதித்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்குள்ளான விமர்சனம் லியோ படத்தின் வெற்றியை பாதிக்குமா..? மேலும் லோகேஷ் தரப்பிடமிருந்து சரியான இதற்கு விளக்கம் வருமா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.