அட்ரா சக்க!...பாலிவுட்டுக்கு போகும் லோகேஷ் கனகராஜ்!...யார் ஹீரோ தெரியுமா?....
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. அவரின் திரைப்படங்கள் ‘லோகேஷ் யூனிவர்ஸ்’ என ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர். விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அடுத்து மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படம் முடிந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது விஜயின் 67வது திரைப்படமாகும்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு பாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது. சல்மான்கான் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
விக்ரம் படத்தை ஹிந்தியில் எடுப்பாரா இல்லை அது புதிய கதையா என்பது விரைவில் தெரிந்துவிடும். மேலும், இது விஜய் படத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குமா இல்லை விஜய் படத்திற்கு பின்பா என்பது தெரியவில்லை.