தலைவர் 171ல் ரஜினிக்கு அந்த படத்தோட லுக்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் வைக்கும் லோகேஷ் கனகராஜ்..

Thalaivar 171: மாநகரம், கதை, மாஸ்டர், விக்ரம் என குறுகிய காலத்திலேயே பெரிய இயக்குனராக வளர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். அதுவும் விக்ரம் படத்தின் மேக்கிங் அவருக்கென ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியது. லோகேஷ் ஒரு புதுமையான உலகத்தை காட்டுவதால் லோக்கி யூனிவர்ஸ் சிலர் சொல்ல துவங்கினார்கள். ஆங்கிலத்தில் எல்.சி.யூ என பலரும் சொல்ல லோகேஷ் கனகராஜும் பிரபலமானார்.

அடுத்து விஜயை வைத்து அவர் இயக்கிய படமான லியோ தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் லியோ படம் பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டது. இதுவே படத்திற்கு பெரிய ஹைப்பை உருவாக்கியது.

இதையும் படிங்க: லேட்டாகும் தலைவர் 171?.. கப்புனு பொண்ணு கையைப் புடிச்சு லோகேஷ் கனகராஜிடம் கொடுத்த கமல்ஹாசன்!..

அதேநேரம், அதுவே படத்திற்கு எதிர்மறையாகவும் மாறியது. ஏனெனில் படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகத்தில் திரைக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. பலரும் இந்த கருத்தை சொல்லவே லோகேஷ் கனகராஜும் இதை ஒத்துக்கொண்டார்.

மேலும், ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்தால் அது வேறலெவலில் இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் தம்பியின் தலையை தடவ போகும் அண்ணன்!.. அந்த படத்தை இந்த வருஷம் எடுக்கப் போறாராம்!..

ஒருபக்கம் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு லால் சலாம், வேட்டையன் என ரஜினி பிஸியாக நடிக்க துவங்கினர். லால் சலாம் படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது. இப்படம் முடிந்தபின் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

thalapathy

thalapathy

இந்நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினி தளபதி படத்தில் எப்படி இருந்தாரோ அப்படி டீ ஏஜிங் செய்யவிருக்கிறாராம். ரஜினி மிகவும் அழகாகவும், இளமையாகவும் இருந்த திரைப்படம் அதுதான். அந்த லுக் லோகேஷுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ரஜினியை அந்த தோற்றத்தில் காட்டவிருக்கிறாராம். கண்டிப்பாக இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்துதான்.

இதையும் படிங்க: விஜயகாந்த இப்படி அசிங்கப்படுத்தணுமா?!.. வீடியோவால் அதிர்ந்து போன நெட்டிசன்ஸ்!..

 

Related Articles

Next Story