‘லியோ’ எந்த லெவல்ல இருக்கு?.. கண்டிப்பா இந்த படத்துலயும் அத ஃபீல் பண்ணுவீங்க. தரமான அப்டேட் கொடுத்த லோகேஷ்..
தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராக வலம் வருபவர்
லோகேஷ் கனகராஜ். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார். ரசிகர்களின் விருப்பத்தை தன் படத்தின் மூலம் நிரூபித்து வருகிறார் லோகேஷ்.
ஒவ்வொரு படத்திலும் லோகேஷை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாகவே அமைந்திருக்கின்றன. மேலும் அனைத்து மொழி நடிகர்களும் பணியாற்றும் ஆசை கொண்ட இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ்.
தெலுங்கில் கூட சிரஞ்சீவி தன் மகன் ராம்சரணுக்காக ஒரு படம் இயக்க வேண்டும் என லோகேஷிடம் கேட்டிருந்தார். தற்போது லியோ படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். ஏற்கெனவே விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்திருப்பதால் லியோ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று சமீபத்தில் தான் ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில் ஒரு விழாவிற்கு வந்திருந்த லோகேஷிடம் லியோ படத்தின் அப்டேட்டை பற்றி தொகுப்பாளர்கள் கேட்டனர். அதாவது படத்தின் டீஸர் வெளியானதில் இருந்து அனைவரும் உச்சரிக்கும் தாரக மந்திரமாக ‘பிளடி ஸ்வீட்’ என்பது தான்.
அதை பற்றி கேட்டதற்கு ‘விக்ரம் படத்தில் எப்படி ஆரம்பிக்கலாமா இருந்ததோ அதே மாதிரி பிளடி ஸ்வீட் என்பதும் லியோ படத்திலும் இருக்கும் ’ என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் படத்தின் 60 நாள்கள் படப்பிடிப்பு முடிந்தது மீதம் 60 நாள்கள் படப்பிடிப்பு இருக்கிறது. பக்கா ஆக்ஷன் படமாகத் தான் இருக்க போகிறது என்றும் லோகேஷ் கூறினார்.