
Cinema News
தனது அப்பாவை பயங்கரமாய் பழிவாங்கிய லோகேஷ் கனகராஜ்.! அவருக்கு இப்படி ஒருஃபிளாஸ் பேக்கா?…
கடந்த 5 வருடத்தில் 4 படங்கள் அதில் 3 படங்கள் பெரிய ஹீரோ படங்கள் அதில் 2 உச்சநட்சத்திரங்களின் படங்கள். ஒவ்வொரு படத்திலும் அதனை விட பெரிய வெற்றி, அதனை விட பெரிய வெற்றி என பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
வேற்று மொழி திரைப்படங்கள் வெளியாகி தமிழக திரையரங்குகளை ஆட்டிபடைத்த நேரம் விக்ரம் எனும் ஒரு படத்தை கொடுத்து வெற்றி மொழிக்காரங்களையே மிரள வைத்துவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவர் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்தது இல்லை. தானே பல சினிமாக்கள் பார்த்து அதன் மூலம், சினிமாவை காத்துகொண்டு குறும்படம் எடுத்து தற்போது இந்த நிலைமையில் இருக்கிறார்.
இவரது தந்தை பெயர் கனகராஜ். இவர் பெயர் லோகேஷ். சினிமாவுக்காக லோகேஷ் கனகராஜ் என வைத்து கொண்டார். இவர் சினிமா பார்ப்பது சினிமாவில் இருப்பது இவரது தந்தைக்கு சுத்தமாக பிடிக்காதாம். எப்போது பார்த்தாலும் நீ உருப்புடாம தான் போவ என கூறுவாராம்.
இதையும் படியுங்களேன் – விக்ரம் 3.! போலீஸ் ‘ரோலக்ஸ்’ சூர்யா.? வில்லன் கமல்.? காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.!
இதனை எப்படியவது பொய்யாக்கி காட்டவேண்டும், மேலும் அப்பாவை பழி வாங்க வேண்டும் என்றே இப்படி, தனது பெயருக்கு பின்னால் கனகராஜ் என சேர்த்துக்கொண்டாராம். இதனை ஒரு வீடியோவில் தெரிவித்து இருப்பர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.