Categories: latest news

ஆரம்பிக்கலாமா!…விக்ரம் ஷூட்டிங் ஓவர்…லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த மாஸ் வீடியோ…

மாநகரம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். தமிழ் சினிமா உலகம் இதுவரை அப்படி ஒரு கதை, திரைக்கதையை பார்த்திருக்கவில்லை. ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக அமைத்திருந்தார். படம் சூப்பர் ஹிட். இப்படத்திற்கு பின் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

மாஸ்டர் படத்திற்கு பின் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் பஹத்பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்து வந்தனர். கொரோனா கட்டுப்பாட்டால் படப்பிடிப்பு தாமதமாகியது. சென்னை, டெல்லி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.

இதையும் படிங்க: அந்த இடத்துல கிழிஞ்சி எல்லாம் தெரியுது…வெட்கமே இல்லாம போஸ் கொடுத்த பார்வதி….

vikram

இந்நிலையில், இந்த தகவலை பகிர்ந்து ஒரு சூப்பர் வீடியோவையும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். ஒரு ஜீப்பின் அருகில் நின்று, ஸ்டார்ட்..ஆக்‌ஷன் என அவர் கூற பஹத் பாசில் துப்பாக்கியால் சுட ஆரம்பிக்கலாமா என லோகேஷ் கூற படக்குழுவினர் உற்சாகமாக கத்துவது போல் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/tv/CalE4HKDRwD/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா